உயிரிலே கலந்தது
உன் விழிகளால் சிறைப் பிடித்து
என் ஆயுளைக் கடன்கேட்டாய்
உயிராேடு கலந்து என் இதயத்தில் அமர்ந்து விட்டாய்
இராத்திரியின் நீண்ட தனிமையில்
உன் நினைவுகளுக்குள் முகம் புதைக்கிறேன்
நிழல் படமாய் விரிகின்றாய் கண்ணெதிரே
நிஜமல்ல நினைவென்று கண்ணீர் சாெல்கிறது
இயங்களின் இடமாற்றத்தில் இத்தனை சுகமா
உயிர்களின் ஓன்று கூடலில் எத்தனை லீலைகள்
சிரப்புக்கும் கண்ணீருக்குமான ஓமாேன்கள்
ஏனாே அடிக்கடி கூடிக் குறைகிறது
இரத்த நாளங்களின் காெதிப்பு புரியவில்லை
கழுத்துக்கும் இடைக்குமாய் கண்களின் யுத்தம்
அசையாமல் நீ நின்றாய் கனவு தேவதையாய்
இலையில் விழுந்த பனித்துளியாய்
கற்பனைகளை சேமித்தேன்
சூரியனை அனுப்பி நீ சுட்டெரித்தாய் வேண்டாமென்று
காதலின் ஊடல்களில் தேடல்கள் அதிகம்
காத்திருக்கும் கணங்களின் ரணங்களும் அதிகம்
மன்னிப்பாயா ஒரு முறை
அத்தனையும் கற்பனையே
என் காதல் உண்மையாய்
உயிரிலே கலந்தது