கலை

கூண்டுக்கு அடங்கா கிளி
ஒன்று கண்டேன் இளபருவத்திலே
கவி சேர்ந்ததோ என் இதயத்தில்
விண்மீணாய் மிளிர்ந்த உன் முகம் கண்டவுடன்

தீபச்சடர் கொண்ட அம்பிகையே
தீச்சுடர் சுட்டாலும் நீ சுட்டுப் பேசுவதில்லை
முல்லைச் சிரிப்பும் குறிஞ்சி மொட்டு
சேர்ந்த கன்னம் எழில் கொஞ்சும் அழகே

குணம் கண்டு கும்பிடும் குலாமர்
மத்தியில் நீ ஒரு நட்சத்திரம்
கன்னியர் கூத்தாடும் பரவுலகில்
உன் கண்கள் போதும்
கன்னியரின் கர்வம் குழைய

வானத்தில் பூக்கும் வானவில்
ஓடி மறைந்தது உன் சேலை மடிப்பை கண்டதும்
பரதம் பூண்ட பாதம் இருக்கையில்
கலைமகள் வாசம் பிறந்தது
உன் கலை ஓங்கவே

கண்கள் சுவைக்கும் காட்சி
அரங்கேறும் உன் படைப்பினிலே
மெய்சிலிர்ப்பேன் அது நான் கண்ட காட்சியா
அல்ல பிரம்மகாவியமா என்று

என்கண்களுக்கு புலப்படாத காட்சி
உன் கண்களுக்கு சித்திரவண்ணமே
கவிபாடும் சித்தனானேன்
உன் சித்திரசுவடுகளைக் கண்டதும்

வலைவுகள் நீண்ட கூந்தலோ
கங்கையை மயக்கச் செய்வது
உன் கரம் படைத்த ஓவியமே
இசை களிப்பில் நீ தீட்டும் அழகுகோலம்
நோக்கினாலே கண்ணிடத்தே தோன்றும்
ஆனந்த தேன்மழை

சித்திரமாடம் புழங்காமல்
சித்திரசேனாவாக பிறப்பெடுத்தாய்
வித்தகர்கோர் உரிய ஓவியமரபு
உன் பிறப்பில் கண்ட அதிசயமே

புணையா வண்ணம் தீட்டும் அழகு
புகைப்படாத சித்திரமே
புவியில் பூத்த இயற்கை இன்று
உன் படைப்பில் ஒரு சகாப்தமே....

எழுதியவர் : ப.இளவரசன் (2-Feb-18, 7:35 am)
சேர்த்தது : vasanedy
Tanglish : kalai
பார்வை : 2878

மேலே