பெண்ணின் எதிர்பார்ப்பு

என் உச்சி குளிர இன்பம்தரத் தேவையில்லை
ஆனால்
என் உச்சி கோத உன் விரல்கள் வேண்டும் என் துன்பம் போக்க...

உன் கண்ணுக்குள் எனைக் காக்கத் தேவையில்லை
ஆனால்
என் கண்ணீர்த் துளிகளை ஏந்திக்கொள்ள உன் கரங்கள் போதும்.

எப்போதும் என்னோடு நீ இருக்கத் தேவையில்லை
ஆனால்
எப்போதும் உனக்காக நானிருக்கிறேன் என்ற வார்த்தை போதும்.

எழுதியவர் : கலாபாரதி (2-Feb-18, 9:13 am)
சேர்த்தது : கலா பாரதி
Tanglish : pennin edhirpaarppu
பார்வை : 249

மேலே