நீராடினாள் பொன் நிறமேனி பூம்பாவை

நீராடி னாள்மங்கை நீந்தி விளையாடி
நீரோடும் காவிரி நின்றவளை வாழ்த்திட
காரோடும் பூங்கூந்தல் கட்டவிழ்ந்து நீர்தவழ
நீராடி னாள்பொன் நிறமேனி பூம்பாவை
யாரெழுது வார்ஓவி யம்

---ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (26-Nov-24, 11:10 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 31

மேலே