அவள்

இடைதொட்டு விளையாடும்
உடைவிட்டு உறவாடும்
......இரவுக்கு ஏங்க வைப்பாள்

தடைகெட்ட இன்பங்கள்
அடைபட்ட இளமேனித்
.....தழுவலிலே தூங்க வைப்பாள்

பிடிபட்டு மறைவாகும்
கொடிவிட்ட கனிகொண்டு
......பிறநினைவு நீங்க வைப்பாள்

இடிபட்டு அடிபட்டு
பிடிபட்டு கடிபட்டு ......
.....இன்பத்தை வாங்க வைப்பாள்




நிலையான மனங்களையும்
அலைபாய வைக்கின்ற
------நீள்விழியாம் படைக்காரி

மலைநாணும் மார்பழகை
இலைநாணும் உறுப்பழகை
......மறைத்திருக்கும் உடைக்காரி

சிலைமேனி குலுங்காமல்
கலைமானின் ஒயிலோடு
.....செல்லுகின்ற நடைக்காரி.

விலையாகும் இன்பத்தின்
விலையாக இன்பம்பெறும்
......வியப்பான கடைக்காரி

எழுதியவர் : kokilamakan (17-Feb-18, 2:17 pm)
பார்வை : 298

மேலே