விருப்பம்

நேர்மையாய் வாழ்வதை விட
நேர்மையானவனாய் காட்டிக்கொள்ளவே
விருப்பம்

தவறுக்கு வருந்துவதை விட
தவறு பிறர் அறியாமல் இருக்கவே
விருப்பம்

உழைத்து பொருள் பெறுவதை விட
உழைக்காமல் பெற்றிடவே
விருப்பம்

உதைவி வாழ்வதை விட
உதவி செய்ததாய் விளம்பரப்படுத்தி கொள்ளவே
விருப்பம்

பகட்டான வார்த்தை பேசி
பலன் பெற்றுக்கொள்ளவே
விருப்பம்

வெறுப்புகள் எல்லாம்
விருப்பமாய் மாறியிருப்பதை வெறுப்பதே
விருப்பம்

நெறி நூல்கள் வெளிவந்து
மனிதனை மனிதத்தனமாய் மாற்றிட்டவே
விருப்பம்

எழுதியவர் : கா வே ரா (17-Feb-18, 5:29 pm)
Tanglish : viruppam
பார்வை : 88

மேலே