துர்ச்சனருக்கு அங்கமுழுதும் விடமேயாம் - நீதி வெண்பா 18

நேரிசை வெண்பா

ஈக்கு விடம்தலையில் எய்துமிருந் தேளுக்கு
வா’ய்’க்கும் விடம்கொடுக்கில் வாழுமே - நோக்கரிய
பைங்கணர வுக்குவிடம் பல்அளவே துர்ச்சனருக்(கு)
அங்கமுழு தும்விடமே யாம். 18

- நீதி வெண்பா

பொருளுரை:

தேனீக்களுக்கு விடம் அவற்றின் தலையிலிருக்கும்;

கொடுமையான துன்பம் தரும் தேளுக்குப் பொருந்திய விடம் அதன் கொடுக்கில் இருக்கும்;

பார்ப்பதற்கும், பார்க்கப் பளபளக்கும் கண்களையுடய பாம்புக்கு விடம் அதன் பல்லிலிருக்கும்;

தீய குணமுடையோர்க்கு அவர்கள் உடம்பு முழுதும் விடமிருக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Oct-25, 12:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே