புனித அழகு

புனித அழகு

விழிக்குக் கிடைத்த பரவசத்தை
......விந்தை யான அனுபவத்தை
மொழிக்குள் புகுத்த விரும்புகின்றேன்
.....முயன்று தோற்று வருந்துகின்றேன்

இதயம் அடைந்த இன்பத்தை
......ஏட்டில் வடிக்கத் தவிக்கின்றேன்
புதிய புதிய வார்த்தைகளைப்
... போட்டு, ஒதுக்கிச் சலிக்கின்றேன்

புனித அழகின் பெருமையினைப்
... புரிந்து கொண்டு மதிக்கின்றேன்
மனித மொழியின் வறுமைநிலை
....மனதைத் தைக்கத் திகைக்கின்றேன் .

எழுதியவர் : kokilamakan (8-Nov-17, 10:36 pm)
பார்வை : 105

மேலே