வார்த்தை தாண்டும் அழகு

வார்த்தை தாண்டும் அழகு

பார்த்த விழியை மீண்டும்
பார்க்கச் சொல்லித் தூண்டும்
வார்த்தை எதையும் தாண்டும்
வனப்பு மனத்தைச் சீண்டும்

வஞ்சி மேனி தீண்டும்
வாய்ப்பை உள்ளம் வேண்டும்
கொஞ்சும் போது ஆண்டும்
கடந்து நொடியில் தாண்டும்

எழுதியவர் : கோகிலா மகன் (16-Nov-17, 9:19 am)
பார்வை : 123

மேலே