ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்கசான்றோர் பழிக்கும் வினை...
ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்கசான்றோர் பழிக்கும் வினை "இந்தக் குறளில், "ஈன்றாள் -சான்றோர்" என்பதை விட ''ஈன்றோர் -சான்றோர்" என்றிருந்தால் எதுகைப் பொருத்தம் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும். அப்படி வார்த்தைகளை அமைக்க வாய்ப்பிருந்தும் வள்ளுவர், தந்தையை ஒதுக்கித் தாயை மட்டும் சொல்லியதற்குக் குறிப்பாக ஏதேனும் காரணம் இருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்களா ?