smart sowmya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  smart sowmya
இடம்:  Madurai
பிறந்த தேதி :  31-Mar-1999
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Jun-2017
பார்த்தவர்கள்:  58
புள்ளி:  8

என்னைப் பற்றி...

என் படைப்புகள்
smart sowmya செய்திகள்
smart sowmya - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2018 6:59 am

எனது நாட்குறிப்பை
நீ....!
படித்து விடுவாயோ
என்ற அச்சத்தைப் போலவே..!

எனது கவிதையை
நீ...!
படிக்காமல் விடுவாயோ
என்ற அச்சமும்...!

ஒன்றில்
என் கோரமுகம்....!
இன்னொன்றில்
என் ஈரமுகம்...!

எப்படியேனும்
மேடை ஏறிடத்துடிக்கும்
தயக்கத்தின் பாதங்கள்
கவிதைகளிலும்...!

இரவின் தனிமையில்
எல்லோரும்
ஆழ்ந்துரங்கிய பின்னர்,
நெடுநேரம் வாசிக்கிறேன்
எழுதத் துவங்காத
என் நாட்குறிப்பின் பக்கங்களை...!

-ஸ்மார்ட்.

மேலும்

smart sowmya - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jul-2018 7:25 pm

மௌனமானவளே. ..!
வெட்கத்திற்கு விவிதிகள் கொடுத்தாயோ..,
உன் சின்ன சின்ன சிணுங்களில்..!

விழிகளில் விதித்தாயோ
இமைகளில் பதித்தாயோ
அடம் பிடிக்கும் உன் புன்னகையை..!

உன் இதழில் பட்டவுடன்
தண்ணீரும் தாகத்தில் தவிக்கிறது
தாகம் தீர்ப்பாயோ,
இல்லை தவிக்கவிடுவாயோ...!

உன் சின்ன சின்ன ஓசைகள்
செவி செதுக்கும் ஆசைகளாக
ஒலிக்கின்றது, என்னுள்...!

உன் முக அழகை களவாடும்
முடிகள் கூட அழகைக் கூட்டுகிறது...
அதைக் கோதும் கைவிரல்கள்
அழகை மீட்டுகிறது...!

உன் அழகைச் சொல்ல
கவிஞனும் கடன்காரன் ஆகிறான்
வார்த்தைகள் இல்லை என்பதால்...!

மேலும்

smart sowmya - கேள்வி (public) கேட்டுள்ளார்
05-Jul-2018 7:37 am

வகுப்பரை கேள்விகளிலிருந்து தப்பிப்பது எப்படி?

மேலும்

இருபதை நெருங்கும் பெண்ணின் ...இதயம் தனக்கோ பிறர்க்கோ வருகிற தடையை எதிர்கொளும் ....வழிவகை கேட்டால், பதில்மொழி தருவது மூத்தவர் கடமை .....தப்பித்தல் குறித்து அறியக் கருதும் பொழுது குட்டு ....கொடுத்தல் தானே முறைமை, .... 09-Jul-2018 12:02 pm
நான் மெல்லிய நகைச்சுவையுடன் சொன்னேன் .அவ்வளவுதான் . இவர் இளையவதினர் . படிக்கும் மாணவியாய் இருக்கலாம் . ஆசிரியர் நம்மிடம் கேள்வி கேட்டுவிடக் கூடாதே என்ற பயம் நம்மில் பலருக்கும் உண்டு கவி smarto என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் . சொன்னால் எனது அனுபவத்தைப் பகிருவேன் 09-Jul-2018 7:49 am
கட்டித் தங்கம் நிகர்த்த ......காலம் விரயம் ஆகிட வெட்டிக் கேள்வி எழுப்பும் ......வீணர் தலையில் பலமாய்க் குட்டு வைத்தது போலக் ......கொடுத்த கருத்து.கைகளைத் தட்டி மகிழும் வண்ணம் .....தந்தது எனக்குள் வேகமே, 08-Jul-2018 11:34 pm
நீங்கள் கேட்க வருவது வகுப்பறையா(classroom) அல்லது வகுப்பரை(classhalf)... வகுப்பறை கேள்விகளுக்கு பதிலளிக்க தன்னம்பிக்கை போதுமானது... வகுப்பரை(பாதி) கேள்விகள் கேட்போரையும், பதில் அளிப்போரையும் முட்டளாக்குகிறது... 06-Jul-2018 1:10 am
smart sowmya - நிலா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jul-2018 11:57 am

சரியான வாழ்க்கை துணையை எவ்வாறு தேர்ந்து எடுப்பது ?

மேலும்

சரியான வாழ்க்கைத் துணையாக எவ்வாறு நான் அமைவது என்ற கேள்விக்கு முதலில் பதில் கண்டுபிடியுங்கள் .அந்தப் பதிலில் சொல்லப்படும் தகுதியில் குறைந்தது 70 % உங்களிடம் அமையும் வகையில் உங்களைத் தயார்படுத்திக் கொண்ட பிறகு வாழ்க்கைத்துணையைத் தேடுங்கள் .சரியான வாழ்க்கைத் துணையை உங்களால் அடையாளம் காண முடியும்.( அவரே உங்களுக்குக் கிடைப்பாரா என்பது வேறு விஷயம். அதை முடிவு செய்யும் காரணிகள் வேறு ) அடையாளம் காண்பதற்கு மட்டுமே இந்த ஆலோசனை . 12-Jul-2018 8:23 am
காதல் திருமணமோ பெற்றோர் நிச்சயித்த திருமணமோ, ஒன்றை நினைவில் கொள்ளல் நலம். கணவன் மனைவி இருவரும் தங்கள் தனிமனித வாழ்வில் நல்லவர்களாகவே இருந்திருப்பர். ஆனால் முற்றிலும் வேறொரு வாழ்க்கை வாழ்ந்த இரு மனங்கள் இணையும் போது நிச்சயம் கருத்து வேறுபாடுகள் இருக்கும். அன்பு ஒன்றே அதை வெல்லும். 06-Jul-2018 6:07 pm
நிலவே வாழ்க்கை என்பது வாதங்களின் மேடை, குழப்பத்தின் குடிசை, அதில் வாழ்ந்து கழித்தவர்ள் நம் பெற்றோர்கள் அவர்களுக்கு எல்லாம் தெரியும் 06-Jul-2018 4:37 pm
"நான்" என்னும் உச்சகட்ட எதிர்பார்ப்பை தவிருங்கள்... கற்பனைகளை விலக்கி, எதார்த்தத்துக்கு இடம்கொடுங்கள்... உணர்வுகள் அனைத்து மனிதர்களுக்கானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்... "நாம்" என்னும் வாழ்க்கை நலமாக அமையும்... வாழ்த்துக்கள்... 06-Jul-2018 1:21 am
smart sowmya - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jul-2018 7:28 am

கம்பன் கவியே
அழகின் புவியே...!

அழகான ஓவியமே
ஒயிலான காவியமே...!

அலுங்காமல் சிரிப்பவளே
குலுங்காமல் சிந்துபவளே...!

மலரே மயங்குதடி
சிலையே திரும்புதடி...!

கவியே நீ தான் எனில்
செவியே தேவையில்லை...!

அழகே...!
நீ தான் தமிழில்
அழகென்ற சொல்லுக்கு...!

மேலும்

ஐ.... ரொம்ப நல்லாருக்கு 05-Jul-2018 9:39 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே