எனது நாட்குறிப்பு
எனது நாட்குறிப்பை
நீ....!
படித்து விடுவாயோ
என்ற அச்சத்தைப் போலவே..!
எனது கவிதையை
நீ...!
படிக்காமல் விடுவாயோ
என்ற அச்சமும்...!
ஒன்றில்
என் கோரமுகம்....!
இன்னொன்றில்
என் ஈரமுகம்...!
எப்படியேனும்
மேடை ஏறிடத்துடிக்கும்
தயக்கத்தின் பாதங்கள்
கவிதைகளிலும்...!
இரவின் தனிமையில்
எல்லோரும்
ஆழ்ந்துரங்கிய பின்னர்,
நெடுநேரம் வாசிக்கிறேன்
எழுதத் துவங்காத
என் நாட்குறிப்பின் பக்கங்களை...!
-ஸ்மார்ட்.