மௌனமானவளே

மௌனமானவளே. ..!
வெட்கத்திற்கு விவிதிகள் கொடுத்தாயோ..,
உன் சின்ன சின்ன சிணுங்களில்..!
விழிகளில் விதித்தாயோ
இமைகளில் பதித்தாயோ
அடம் பிடிக்கும் உன் புன்னகையை..!
உன் இதழில் பட்டவுடன்
தண்ணீரும் தாகத்தில் தவிக்கிறது
தாகம் தீர்ப்பாயோ,
இல்லை தவிக்கவிடுவாயோ...!
உன் சின்ன சின்ன ஓசைகள்
செவி செதுக்கும் ஆசைகளாக
ஒலிக்கின்றது, என்னுள்...!
உன் முக அழகை களவாடும்
முடிகள் கூட அழகைக் கூட்டுகிறது...
அதைக் கோதும் கைவிரல்கள்
அழகை மீட்டுகிறது...!
உன் அழகைச் சொல்ல
கவிஞனும் கடன்காரன் ஆகிறான்
வார்த்தைகள் இல்லை என்பதால்...!