கன்னத்தில் ஒரு முத்தம்
சின்னதாய் ஒரு சந்திப்பு
நிகழ்ந்தால் எப்படி இருக்கும்
நினைத்துப் பார்க்கிறேன்
அன்பே!
என் கண்களை
நீ காண கண்டால்
நீ ஓடி வந்து எந்தன்
நெஞ்சோரம் சிணுங்குவாய்
எனை அணைத்தவாறு..!
நானும் ஓடி வந்து
உன்னை அள்ளி
அணைத்து
உன் கண்ணத்தில்
ஒரு முத்தம் வைப்பேன்
அன்பே!
இது யாவும் காமத்தின்
மிகுதியால் என்னுள்
ஊறும் ஆசைகள் அல்ல
உன் மேல் உள்ள
காதலின் மிகுதியால்
என்னுள் ஊறும்
ஆசைகள்.....!!!