நீட்

நீட் தேர்வுக்கு ஆதரவளித்தால் கெட்டவன் என்ற தோற்றத்தை உருவாக்கப் பலர் முயற்சிக்கிறார்கள். அதில் சிலருக்கு மோடி வெறுப்பு காரணமாக அதைச் செய்கிறார்கள் அவர்களைத் திருத்த முடியாது. ஆனால் புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் இதை வேண்டுமென்றே மக்களுக்கு எதிரானது போல திரிக்கத் துடிகின்றன.

புதிய தலைமுறை டீவியின் கார்த்திகை செல்வன், குணா , செந்தில் இந்த மூன்று ஓநாய்களும் தனது எசமானுக்கு மிக மிகக் கேவலமாக நாக்கை தொங்கப் போட்டு வேலை செய்வது அப்பட்டமாக இந்த விசயத்தில் தெரிகிறது.
எந்த கட்சி சார்பும் இல்லாத, சமூகத்தின் மீது அக்கறை உள்ள நபர் என்றால் சரி விஷயத்தை மேற்கொண்டு படிக்கவும்.
முதலில் நீட் தேர்வு எதனால் தேவை ?

நாடு முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனித் தனியே தேர்வுகள் நடத்தினர். இதனால் CMC வெள்ளூர் , MMC சென்னை , ஸ்ரீ ராமச்சந்திரா மெடிகல் காலேஜ் சென்னை , SRM என்று தனி தனியே மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். இது தவிர மற்ற மாநிலங்களில் பஞ்சாப் முதல் ஹரியான தொட்டு மேற்கு வங்காளம் வரை உள்ள மெடிகல் காலேஜ் அனைத்திலும் உள்ள 15% இடத்திற்கும் போட்டிபோடா தேர்வு அங்கேயும் எழுத வேண்டும்.

யோசிக்கவும் எவ்வளவு தேர்வு தான் எழுதுவது??? இது மிக மிகப் பழைய சிஸ்டம். எனவே இந்தியா முழுவதும் ஒரே தேர்வு முறை என்று அறிவித்தது மோடி அரசு.

இது மாநில மாணவர்கள் உரிமை பாதிக்கப்படும் என்றனரே ?

பாருங்கள், வெறும் தேர்வு மட்டும் தான் பொதுவாக நடக்கிறது ஆனால் அந்த அந்த மாநிலங்களில் உள்ள மாணவர்கள் தான் இடத்தினை நிரப்புகிறார்கள். வேறு மாநிலத்தவருக்கு எப்போதும் போல 15% இடம் உண்டு. 100ல் 85சதவீதம் அந்த அந்த மாநிலங்களில் படிக்கும் மாணவர்கள் தான் நிரப்புகிறார்கள். 15% என்பது மற்ற மாநிலத்தவருக்கு ஒதுக்கும் அதே பழைய நடைமுறைதான். தமிழக மாணவர்களுக்கும் அதே உரிமை தான் உள்ளது - இங்கே கிடைக்கவில்லை என்றால் 15% வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்கள் குஜராத் முதல் டெல்லி வரை எந்தக் கல்லூரியையும் தேர்வு செய்ய முடியும். எனவே இது எந்தப் பாரபட்சமும் கிடையாது.
{மாநிலங்களின் அதே இடஒதுக்கீட்டு முறையில் இடங்கள் நிரப்பலாம் அதுவும் எந்த தடையும் இல்லை. வெறும் தேர்வு நடத்துவது மட்டும் தான் CBSE வேலை. எனவே இடஒதுக்கீட்டிலும் பிரச்சனை இல்லை.}

எதற்கு CBSE நடத்த வேண்டும்???

இது தேர்வு தான் CBSE நடத்துகிறது தவிர பாடத்திட்டம் என்பது medical council of india பரிந்துரை செய்தது. medical council of india தர நிர்ணயம் செய்கிறது - இது ஆக அவசியமான ஒன்று. ஏன் என்றால் என் மாநிலத்தில் மாணவர்கள் அதிக மதிப்பெண் வாங்க நான் பாடத்திட்டத்தில் மிக எளிமையாக அமைத்து விட முடியும். இதே போல எல்லா மாநிலங்களும் செய்ய முடியும். ஏன் என்றால் மாநில உரிமையில் கல்வி துறை வருகிறது என்பதால் பாடத்திட்டம் உருவாக்குவதும் அவர்கள் கையில் செல்கிறது.

எனவே கல்வி தரத்தினை இது கேள்விக்குறி ஆக்கிவிடும் - அதன் மூலம் உலகாவிய அளவில் நமது கல்வி தகுதி மதிப்பு குறைந்து அங்கீகாரம் இல்லாமல் போகும். எனவே மதிப்பெண் முக்கியம் அல்ல கல்வி தரம் முக்கியம் என்பதால் நாடு முழுவதும் ஒரே தரத்தினை medical council of india மூலம் நிர்ணயம் செய்து - தேர்வை நடத்த மட்டும் CBSE பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவு தான் விஷயம்.
பின் ஏன் போராட்டங்கள்?

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் போராட்டம் நீட் தேர்வுக்கு எதிராக இல்லை. காஷ்மீர் கூட கிடையாது. ஆனால் இங்கே தமிழகத்தில் மோடி எதிர்ப்பு என்ற கோசத்தில் ஏதாவது பிரச்சனை கிடைக்காத என்று திரிகிறார்கள் அவ்வளவு தான்.

மிக முக்கியமாக புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் இதை வேண்டும் என்றே சர்ச்சை ஆக்கக் காரணம் : SRM மெடிகல் காலேஜில் நீங்கள் 2014க்கு முன் சேர்ந்தால் குறைந்தது 50 லட்சம் முதல் 1கோடி வரை நன்கொடை வசூல் செய்தனர். இதன் மூலம் SRM கல்லூரி முதலாளி பச்சை முத்து வருடம் வருடம் 100கோடிக்கு மேல் வருமானம் பெற்றார்.

{Jun 5, 2014 TimesofIndia பத்திரிகையில் வெளிப்படையாக மாணவர்கள் இந்த SRM பல்கலைக்கழகம் 1கோடி வசூல் செய்வதாக கூறினார். அதை விவாதம் நடத்தினரா இந்த புதிய தலைமுறை டீவி.}
இப்போது இந்த வசூலில் மரண அடி விழுந்துள்ளது.
ஏன்?

மோடி அவர்கள் நீட் என்ற ஒரே தேர்வு முறை மட்டும் அல்ல அந்த மதிப்பெண் கொண்டு தான் அனைத்து இடங்களும் அரசே நிரப்பும் என்று கூறிவிட்டார். எனவே தங்கள் இஷ்டம் போல் ஆடித் திரிந்த இந்த SRM கல்லூரி போன்றவர் வருமானம் முழுவதும் போச்சு.
தங்கள் முதலாளியின் காலை நக்கி வாலை ஆட்டும் நாயின் விசுவாசம் என்னவோ அதே தான் புதிய தலைமுறை கார்த்திகை செல்வன், குணா , செந்தில் போன்ற ஆட்கள் செய்கிறார்கள். தங்கள் முதலாளியின் ஆணையை ஏற்று டீவியின் விவாதம் நடத்துகிறேன் பேர்வழி என்று கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல் - ஒரு பத்திரிக்கையாளர்க்கு இருக்க வேண்டிய குறைந்த பட்ச நேர்மை கூட இல்லாமல் முதலாளி வீசும் காசுக்கு வாலை ஆட்டி வாயைத் திறந்து வாணி வடிக்கும் இந்த மூன்று பத்திரிக்கையாளர்களும் நீட் தேர்வுக்கு எதிராக தங்களால் முடிந்த அளவு பிரச்சாரம் செய்கிறார்கள்.

புதிய தலைமுறை நேர்படப் பேசு - குனிந்து பேசு எல்லாம் இருக்கட்டும் - நீங்கள் கொஞ்சமாது நேர்மை இருந்தால் முதல் SRM காலேஜ் அடிச்ச கொள்ளையை பத்தி பேசு.

"SRM கல்லூரியின் வரலாற்றில் நடந்த கல்வி கொள்ளை உண்மையா?" என்று ஒரு விவாதம் நடத்தத் திராணி இருந்தால் அவர்களை அந்தத் தலைப்பில் ஒரு விவாதம் நடத்தக் கூறுங்கள் நான் மாரிதாஸ் முழு ஆதாரங்களைத் திரட்டி வருகிறேன்.
இதை புதிய தலைமுறைக்குச் சவாலாகவே கூறுகிறேன். வெக்கம் சூடு சொரணை மானம் ரோசம் ஏதாவது கொஞ்சம் இந்த குணா செந்தில் கார்த்திகேயன் யாராவது ஒருவர் இந்தத் தலைப்பில் விவாதம் செய்ய சொல்லுங்கள் பார்க்கலாம் இவனுக்க நேர்மையை.
{மெடிகல் காலேஜ் ஓனர் என்றால் அவர் தயவு இங்கே அனைத்து கட்சிக்கும் வேண்டும். ஏன் என்றால் உறவினர்கள் தங்கள் பிள்ளைகளை டாக்டர் ஆக்கலாம் அல்லவா. இப்போ அந்த கதை எல்லாம் நடக்காது. எனவே பச்சை முத்து போல ஆளுங்களுக்கு பல் பிடிங்கியாச்சு. எனவே அய்யோ மன்னர் பரம்பரை போல வளம் வந்தோமே இப்போ இந்த நீட் வந்து கெட்டு போச்சேனு குதிகிரார்கள். அதான் புதிய தலைமுறை விட்டு கேவலமாக செய்திகளை திரிகிறார்கள்.

அருவருப்பான சாக்கடை புழுவாக ஒரு வாழ்க்கை இவர்களது.. வேறு ஒன்றும் இல்லை.
நீட் தேர்வில் குளறுபடி பற்றி????
ஏறக்குறைய 1லட்சம் மாணவர்கள் இங்கே தேர்வை எழுதியுள்ளனர். சுமார் 1000மாணவர்கள் வரை வேறு மாநிலங்களுக்குச் சென்று எழுதியுள்ளனர். இதற்கு என்ன காரணம் என்று தீர விசாரணை செய்ய வேண்டும். விசாரணை செய்யாமல் நம்மால் தெளிவாக பதில் கொடுக்க முடியாது. ஒன்றை நன்கு புரிந்து கொள்ளுங்கள் இது தமிழகத்தில் மட்டும் அல்ல பரவலாக இந்தக் குறை அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. ஆனால் இங்கே தமிழக மாணவர்களுக்கு மட்டும் நடக்கும் அநீதி போலவும் , மொத்த மாணவர்கள் தமிழகத்தை விட்டு வெளியே எழுதச் சென்றது போல ஒரு உருவகம் செய்வது திட்டமிட்ட செயல்.
ஒரு தவறு நடந்தால் அதை எப்படிச் சரி செய்ய வேண்டும் என்று சிந்திப்பது ஆரோக்கியமான விசயமா இல்லை மோடி ஒழிக ஒழிக என்று பிரச்சாரம் செய்வது ஆரோக்கியமா????

மோடி என்ற நபர் இந்த NEET தேர்வைக் கொண்டு வந்து உண்மையில் மாணவர்களுக்கும், பெற்றோர்க்கும் மிகப் பெரிய நிம்மதி கொடுத்துள்ளார் என்பது தான் நாடு முழுவதும் நிலவும் உண்மை. நான் கேட்கிறேன் எந்த மாநிலமாது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடக்கிறதா???? கேவலமான அரசியல் பிழைப்பும் இங்கே நடக்கிறது.
மிக அதிக கெடுபிடியாக தேர்வு நடக்கிறதே சரியா???

மாணவர்கள் எப்படி வரவேண்டும் என்று அனைத்தையும் CBSE தெளிவாக வெளியிட்டுள்ளது. எனவே அதன் படி வராமல் சில மாணவர்கள் வருவது மிக இயற்கையாக அனைத்துத் தேர்வு முறைகளிலும் நடைபெறும் விசயமே.
அண்ணா யுனிவெர்சிட்டி தேர்வுகள் ஆரம்பித்து 12ஆம் வகுப்பிற்கு நடக்கும் தேர்வு வரை பாருங்கள் இந்தக் கெடுபிடி இருக்கும். மருத்துவ நுழைவுத் தேர்வு 2015ல் சிலர் சின்ன மைக்ரோ சிப் மூலம் தேர்வு விடைகளை தங்கள் உறவினர்கள் மூலம் மேற்று திருட்டுத் தனம் செய்ததைக் கண்டுபிடித்தனர்.

கொஞ்சம் யோசிக்கவும். வெறும் ABCD தான் விடை. விடை தெரிவிக்க பெரிய போன் எல்லாம் தேவை இல்லை - குட்டி vibration sensor போதும் முதல் கேள்விக்கு A தான் விடை என்றால் ஒரு சின்ன வைப்ரேசன். Bஎன்றால் இரண்டு முறை வைப்ரேட் என்று வைத்தால் போதும் எளிமையாகத் திருட்டுத்தனம் செய்யலாம். எனவே கெடுபிடி நல்லது தான்.

இதே போல ஊடகங்கள் ஒவ்வொரு தேர்வுக்கும் சென்றாலும் பல சம்பவங்கள் கிடைக்குமே. அட நமது இன்ஜினியரிங் கல்லூரிகளுக்குத் தேர்வு நடக்கும் போது போங்க அவனுக்க அந்த அந்தக் கல்லூரி நிர்வாக அடிக்கிற கூத்தை பாருங்கள் இது எல்லாம் சாதாரண விசயமாகத் தெரியும். எனவே ஊடகங்கள் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் அவ்வளவு தான்.
உயிர் இழப்பு? என்று செய்தியை பரப்புவது எல்லாம் மிக மோசமான ஊடக சுதந்திரத்தை காட்டுகிறது. 12ஆம் வகுப்பு தேர்வு எழுத அனுப்பிவிட்டு என் நண்பனின் தந்தை இறந்து போனார் அப்போ 12ஆம்
வகுப்பு தேர்வு தான் காரணம் என்பதா? 10ஆம் வகுப்பு தேர்வு எழுத சென்ற மாணவன் நேரம் குறைவாக இருப்பதால் வேகமாக சென்று வாகன விபத்தில் இறந்தான் - அப்போ 10ஆம் வகுப்பு தேர்வு தான் காரணம் என்போமா? இது முறையான அணுகுமுறை அல்ல. இதை தேர்வுடன் தொடர்பு படுத்தி பேசுவதே தவறு.
எல்லா ஊடகமுமா செய்யும்?

அட நாம் தமிழ்நாட்டில் புதிய தலைமுறை ஆரம்பித்து news7 வரை எந்த யோக்கியன் டீவி சேனல் நடத்துகிறார்கள். சில பேர் நேர்மையாக இருக்கலாம். ஆனால் இங்கே செய்தி ஊடகங்கள் மிக மிக மிகக் கேவலமாக அருவருப்பான கூட்டம் என்பது அசைக்க முடியாத உண்மை.

அது சரி அனைத்து ஆனால் CBSE பாடத்திட்டத்தில் கேள்விகள் இருப்பது சரியா? ஒரே பாடத்திட்டம் இல்லாத போது ஒரே பொது தேர்வும் தவறு தானே?

ஆம் ஆனால் CBSE பாடத்திட்டம் என்று கூற கூடாது - Ministry of Human Resource Development மூலம் medical council of india பரிந்துரைக்கும் அந்த அளவை CBSE 95% பின்பற்றுகிறது. அதே போல பின்பற்றாதது மாநில அரசுகளின் குறையா இல்லை CBSE குறையா?
கூறுங்கள் IT ஊழியர்கள் ஆரம்பித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வீட்டுப் பிள்ளை வரை எல்லோரும் எங்கே படிக்கிறார்கள்? CBSE தானே. ஏன் ? தரம் மேம்பட்டுள்ளது. அது போல State board முன்னேற்ற முயற்சி செய்ய வேண்டுமா இல்லை எனக்குத் தெரியாது என் தகுதிக்கு நடத்து என்று கூறவேண்டுமா?

இதனால் தான் கிராமப் புற மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது தான் உண்மை. அனைவரும் ஒரே கல்வி கிடைத்துவிட்டுப் போகட்டுமே. அனைத்துப் பள்ளிகளையும் CBSEக்கு மாற்றுகிறேன் என்று மாநில அரசு முடிவு செய்யவேண்டியது தானே!! இல்லை அவர்கள் போல 90% அது Ministry of Human Resource Development பரிந்துரைக்கு ஏற்றார் போல பாடத்திட்டத்தை வடிவமைக்க வேண்டியது தானே.

எனவே கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள் எதார்த்தத்தை. ஒரே பாடத்திட்டம் கொண்டு வருவதை நான் ஆதரிப்பேன். ஆனால் அதை மாநில அரசுகள் நிச்சயம் ஆதரிக்க போவது இல்லை. அதுவும் திராவிட கட்சிகள் வாய்ப்பே இல்லை. எனவே மாநில அரசை பாடத்திட்டத்தை மேம்படுத்த தான் நாம் கூறவேண்டும். {அரசு ஊழியர்களை எங்கே போராட்டம் இதற்க்கு நடத்த சொல்லுங்க பார்க்கலாம். சம்பளம் போதவில்லை என்று மட்டும் போராட்டம் நடத்தும் - கல்வி தரதின் மீது எந்த அக்கறையும் இல்லாத ஆசிரியர்கள் ஒரு பக்கம் - மேம்படுத்த அக்கறை இல்லாத அரசு ஒருபக்கம் என்றால் அவர்கள் தான் கிராம புற மாணவர்கள் பாதிக்க காரணம்.} இதை முதலில் புரிந்து கொள்ளவும்.

இறுதியாக :

நீட் தேர்வுக்கு ஆதரவாக மாரிதாஸ் இருக்கிறார் பாருங்கள் எவ்வளவு பெரிய துரோகி என்று என்னை மட்டும் அல்ல நீட் தேர்வுக்கு ஆதரவாகப் பேசினாலே தவறானவர் போல சித்தரிக்க ஒரு கூட்டம் இங்கே திரிகிறது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லி விட்டுப் போகட்டும் ஆனால் மோடி நீட் தேர்வு அமல்படுத்தியதற்கு மிகப் பெரிய அளவில் நான் நன்றி தெரிவித்து கொள்வேன்.

1.முதலில் எல்லா மெடிகல் காலேஜிக்கும் தேர்வுக்கு விண்ணப்பித்து அதிகப்படியான தேர்வுகள் தயார் ஆவது மூலம் மாணவர்கள், பெற்றோர்கள் பட்ட சிரமத்தை இது முழுவதும் நீக்கியுள்ளது.

2.இரண்டாவது 50லட்சம் முதல் 1கோடி வரை நன்கொடை மூலம் இடங்களை விற்றுப் பல ஆயிரம் கோடிகளை குவித்து மெடிகல் காலேஜ் வச்சுருந்தான் பெரிய குறுநில மன்னன் போல உலாவந்த இந்த SRM போன்ற கல்லூரி முதலாளிகளின் ஆட்டத்தை ஒடுக்கி - அனைத்து இடங்களும் அரசே நிரப்புவது ஆகச் சிறந்த விஷயம்.

இந்த இரண்டு காரணங்களுக்கு நான் நீட் தேர்வை கொண்டு வந்த மோடி அவர்களுக்கு எத்தனை எதிர்ப்பு வந்தாலும் நன்றி கூறுவேன். இன்று அல்ல நாளைத் தலைமுறை நிச்சயம் உண்மையை உணரும். ஆயிரம் எதிர்ப்புகள் உருவாக்கலாம், அதன் மூலம் என்னைப் பலர் அவமானம் செய்ய துடிக்கலாம் - ஆனால் உண்மையின் பக்கம் நிற்கவே விரும்புகிறேன். அதனால் மோடி அவர்களை நான் ஆதரிக்கிறேன்.

"புதிய தலைமுறை இந்த மாநிலத்தின் கேவலம் ; அவர்கள் முதலாளி இந்த மாநிலத்தின் அவமானம் ; அதில் வேலை செய்யும் அடிமைகள் பத்திரிகை துறைக்கே தலைகுனிவு".

-மாரிதாஸ்

எழுதியவர் : மாரிதாஸ் (10-May-18, 9:00 am)
Tanglish : need
பார்வை : 127

மேலே