pranavan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : pranavan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 08-Mar-2012 |
பார்த்தவர்கள் | : 257 |
புள்ளி | : 260 |
தேன் சிந்தும் பூக்களை
பார்த்திருப்பீர்கள்.
நீர் சிந்தும் பூக்களை
பார்த்ததுண்டா.?
அது வாசல் தெளிக்கும்
எந்தமிழ் பெண்கள்தான்.!
கோலமிடும் பெண்களால்
வாசல் அழகாகி..
வீதி அழகாகி..
ஊரே அழகாகும்.!
வாசலுக்கும்
வாலிபத்திற்கும்
ஓரு சேர வண்ணம் பூசும்
வண்ணத்துப்பூச்சி
அவர்கள்.!
ஆணுக்குத்தெரியும்
கோலமயில் இருக்கும் வீடு
கோலங்களால் ஆனதென.!
வானம் பார்த்துக்கிடந்த
வண்ணக்கோலங்களால்
வானவில்
வளைந்துபோன காலமது.!
ஒரு முறைக்கு
ஒன்பது வெண்முத்துக்கள் சிந்தும்
மாயச்சிப்பி அவர்களது கைகள்.!
புள்ளியைச்சுற்றிய கோடுகள்
கோலங்களாகி நிற்க
கோலத்தைச்சுற்றியப்புள்ளிகள்
காதலாகி நின்றார்கள்
எல்லாம் போனது என்னை விட்டு,
கையில் இருந்தது உன் இசை மட்டும்தான்.!
அது நம்பிக்கை கொடுத்து - எனை
நடக்க செய்தது எட்டுத்திசைமட்டும்தான்.!
*******************
உன் பாட்டு வருடும் அளவுக்கு..
பாவிமக விரல் எதுவும் வருடவில்லையே.!
இசைக்கு ஈடா..
இதயத்தை யாரும் திருடவில்லையே..!
********************
நேசத்த நினைச்சு..உந்தன்
இசைய பருகுறேன்..!
நெருப்புல விழுந்த..
நெய்யா உருகுறேன்..!
********************
தாய் செத்த விழிநீர இறக்கிவைக்க..
தாங்காத சோகத்த பரப்பி வைக்க..
உன்இசைதான் எனக்கு மடிதந்தது.!
வாழ்கையின் மீது ஒரு பிடிதந்தது.!
பூக்கள் மணமெழுத
****புல்லாங்குழல் இசையெழுத
ஈக்கள் எதுகையிட
****இலைகள் மோனையிட
கீற்று தவிப்பெழுத
****கிளிகள் பேச்செழுத
ஊற்று சிலிர்ப்பெழுத
****உயிர்கள் மூச்செழுதும்
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..!
சேற்றுக் கூழருந்தி
****செங்கதிர்கள் அசைந்தெழுத
ஆற்றின் கால்களில்
****சலங்கைகள் குதித்தெழுத
சோற்றுக் கனவுகளில்
****சிறகுகள் சோர்ந்தெழுத
நேற்றில் எஞ்சிய
****நம்பிக்கை உயிர்த்தெழுதும்
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..!
நைந்த நினைவுகளும்
****நிலத்தின் பெருமூச்சும்
நாளைய கேள்விகளும்
****நீங்காத ஆசைகளும்
காலப் பெருவெளியின்
****கவலைகளும் கண்ணீரும்
கரைப
எங்கோ ஒரு திசையிலிருந்து
சந்தோஷ கூக்குரலிடும்
சந்தம் கேட்டது - அது
ஏதோ ஒரு குழந்தை பிறந்து விட்டது
என்பதை உறுதி செய்தது...
எங்கோ ஒரு திசையிலிருந்து
அழுகையின் பேரிரைச்சல்
ஒப்பாரியின் உருவத்தில் கேட்டது - அது
ஏதோ ஒருவர் இறந்து விட்டார்
என்பதை உறுதி செய்தது...
இப்படியாக
எதிர் நோக்கிச் செல்லச் செல்ல
மனிதர்களின் பிறப்பு இறப்பு அடையாளங்களை
பார்க்க வேண்டி இருந்தது - ஆனால்
கடைசி வரை பார்க்கவே இல்லை
மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களை...
உன்னிடம்
பலவீனமாக இருப்பதே
எனது பலமாக இருக்கலாம்
உன்னை இழந்துவிடும்
பயம் இருக்குவரை
நான் தைரியசாலியாகவே
இருப்பேன்
நீ ஒரு தொட்டிலில்
நான் ஒரு தூளியில்
யாருக்காய் யார் பிறந்தோம்
நீ ஒரு மடியில்
நான் ஒரு மடியில்
யார் பசிக்காய் யார் அழுதோம்
நீ ஒரு சுற்றமும்
நான் ஒரு சூழலும்
யாருக்காய் யார் வளர்ந்தோம்
உன் முதல் பார்வையும்
நம் முதல் வார்த்தையும்
யார் உறவை யார் வளர்த்தோம்
உன்மடி சாய நானும்
என் உயிர் சேரநீயும்
முதல்காதல் யார் மொழிந்தோம்
என்வானில் உயர நீயும்
உன்நினைவில் விரிய நானும்
யார் சிறகால் யார் பறந்தோம்
நீ அந்த மஞ்சம் தூங்க
உன் நினைவால் நெஞ்சம் ஏங்க
யார் கனவில் யார் மிதந்தோம்
ஊடலும் வாடலும்
முடிந்தபின் கூடலும்
யாருக்காய் யார் வளைந்தோம்
நீ ஒரு சாதியில்
நான் ஒரு சாதியி
நித்தம் வலிதாங்கும்
நிலை வேண்டாம் எஜமானே
முழுதாய் இன்றென்னை
இரையெனக் கொண்டுவிடு
என் தேகத்தைக் கூறுபோடு
உன்னிடம் கூனிக் கையேந்தி
ஒருவேளை பசியாறும்
என்
இரைப்பை தேங்கிய
செரிமான மிச்சத்தை
கஞ்சி என
கலயத்தில் சேர்த்துக்கொள்
அடிமைத்தனம் கொண்டு
வெகுண்டெழுந்து நிமிராதஎன்
நெஞ்சைப்பிளந்து
நிறைந்தொழுகும் குருதியை
குழம்பெனப் பிசைந்துகொள்
உன் அடக்குமுறை கண்டு
ஆயுதம் ஏந்தாத
விரல்களைத் துண்டித்து
மிளகாய்ப் பிஞ்சுபோல்
நறுக்கென கடித்துக்கொள்
உரிமைக்குக் குரல் எழுப்பத்
தெரியாத குரல்வளையை
கடித்துச் சுவைத்து
கரும்பெனத் தின்றுவிடு
எதிர்த்தொரு வார்த்தை
எழுப்பாத என் நாவை
வெ
நித்தம் வலிதாங்கும்
நிலை வேண்டாம் எஜமானே
முழுதாய் இன்றென்னை
இரையெனக் கொண்டுவிடு
என் தேகத்தைக் கூறுபோடு
உன்னிடம் கூனிக் கையேந்தி
ஒருவேளை பசியாறும்
என்
இரைப்பை தேங்கிய
செரிமான மிச்சத்தை
கஞ்சி என
கலயத்தில் சேர்த்துக்கொள்
அடிமைத்தனம் கொண்டு
வெகுண்டெழுந்து நிமிராதஎன்
நெஞ்சைப்பிளந்து
நிறைந்தொழுகும் குருதியை
குழம்பெனப் பிசைந்துகொள்
உன் அடக்குமுறை கண்டு
ஆயுதம் ஏந்தாத
விரல்களைத் துண்டித்து
மிளகாய்ப் பிஞ்சுபோல்
நறுக்கென கடித்துக்கொள்
உரிமைக்குக் குரல் எழுப்பத்
தெரியாத குரல்வளையை
கடித்துச் சுவைத்து
கரும்பெனத் தின்றுவிடு
எதிர்த்தொரு வார்த்தை
எழுப்பாத என் நாவை
வெ
அவன் அவனாகவே இருக்கிறான்
காதலின் உரசல்களில்
அதிக அதிர்வெண்களை
அவன் எப்போதும் பதிந்ததில்லை
காதலின் சிக்கலான விதிமுறைகள்
அவனுக்குப் புரிந்ததே இல்லை
அவன் அவனாகவே இருக்கிறான்
அவன் உடல்மிகும் வெப்பம் என்னை
அணுப்பொழுதும் சூழ்ந்தே இருந்தாலும்
காதலிக்கிறானா தெரியவில்லை
காதல் மொழிகள் சொன்னதும் இல்லை
அவன் அவனாகவே இருக்கிறான்
என் முத்தங்களில் எப்போதும்
கண்மூடிக் கிறங்கியதில்லை
மற்றுமொரு முத்தம்
பதிலாக கிடைத்ததும் இல்லை
அவன் அவனாகவே இருக்கிறான்
திரை அரங்குகளின்
இருட்டு மூலைகளில்
என்னைத் தழுவிச்சுகம் கண்டதில்லை
என் சரிந்த முந்தானைகளில்
எப்பொழுதும்
சமநிலை தவறியதில்லை
அவன் அவனாக