என் முடிவுகளை எதற்காகவும் மறுபரிசீலனை செய்ய நான் ஒருபோதும் விரும்புவதில்லை......
உயரப் பறக்கையில் எரிந்துவிழும் இறகுகளுக்காக நான் வருத்தப்படுவதும் இல்லை அதற்காக அனுதாபங்களை எதிர்பார்ப்பதுமில்லை....
நான் எப்படியோ அதுவே நான்.... எனக்கான சுதந்திரம் என்னிடம் உள்ளது அதற்கான மதிப்பும் நான் அறிவேன்........
அதிகாரம் அறவே பிடிக்காது.. அன்பு அதிகமாய் வைப்பதில்லை..
என் எண்ணங்களில் குறுக்கிடாத அழகான குடும்பம் .... தன்னம்பிக்கை தரும் தொழில், மனநிம்மதி அளிக்கும் பொது சேவை.... தாய் போல் ஒரு தோழி... துணையிருக்கும் நண்பர்கள்....
என் வழியில் நான் செல்லத் தடைகள் இல்லாத வாழ்க்கை எல்லாமே அன்னையினால்.....
பூக்கள் மணமெழுத
****புல்லாங்குழல் இசையெழுத
ஈக்கள் எதுகையிட
****இலைகள் மோனையிட
கீற்று தவிப்பெழுத
****கிளிகள் பேச்செழுத
ஊற்று சிலிர்ப்பெழுத
****உயிர்கள் மூச்செழுதும்
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..!
சேற்றுக் கூழருந்தி
****செங்கதிர்கள் அசைந்தெழுத
ஆற்றின் கால்களில்
****சலங்கைகள் குதித்தெழுத
சோற்றுக் கனவுகளில்
****சிறகுகள் சோர்ந்தெழுத
நேற்றில் எஞ்சிய
****நம்பிக்கை உயிர்த்தெழுதும்
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..!
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..!
நிறைவான கவிதை...... நீண்ட இடைவெளிக்குப்பின் தளத்திற்கு வந்ததும்
ஓர் நிறைவான கவிதை படிக்க வாய்ப்பளித்த தங்களுக்கு நன்றி... 31-Aug-2015 6:20 pm
அன்புள்ள கவித்தா சபாபதி,
தங்கள் கவிதை 'காற்றின் கவிதைகள்' 3 பத்திகளில் அமைத்திருக்கிறீர்கள்.
ஒவ்வொரு பத்தியிலும் அளவடிகள் (4 சீர்கள் கொண்டது) ஐந்து உள்ளன. ஐந்தாவது அடி 3 பாட்டிலும் தனித்து பொதுவாக வருகிறது.
எனவே ஒவ்வொரு பாடலையும் முதல் 4 அளவடிகளை மட்டும் எடுத்துக் கொண்டால் கலிவிருத்தம் என்று வருகிறது.
பூக்கள் மணமெழுத புல்லாங்குழல் இசையெழுத
ஈக்கள் எதுகையிட இலைகள் மோனையிட
கீற்று தவிப்பெழுத கிளிகள் பேச்செழுத
ஊற்று சிலிர்ப்பெழுத உயிர்கள் மூச்செழுதும்
காற்றின் பக்கங்களில் கவிதைகள் கவிதைகள்!
ஐந்தாவது அடியை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இத்தகைய அமைப்பிற்கு ஒரு உதாரணம் தருகிறேன்.
நான் இத்தளத்தில் நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர் தேவாரம் - திருவதிகை வீரட்டானம் என்ற தலைப்பில் 10 பாடல்கள் பதிவு செய்திருக்கிறேன்.
உதாரணத்திற்கு ஒன்று முதல் பாடல்: அனைத்து பாடல்களும் கழிநெடிலடியாக ஆறு சீர்களில் அமைந்த 'அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்' ஆகும்.
4 சீர்கள் - அளவடி;
5 சீர்கள் - நெடிலடி
6 சிர்களும் அதற்கு மேலும் - கழிநெடிலடி
ஐந்தாவது அடியும் ஆறுசீர்கள் - தனியாக 'அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை' என .பொதுவாக ஒவ்வொரு பாடலிலும் அமைந்திருக்கும்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்
வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும்
அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. பாடல் 1
அன்புடன்,
வ.க.கன்னியப்பன் 29-Aug-2015 9:43 pm
இயற்கை யாவும் இசைந்து இசைக்கிறது உங்கள் கவி தனில் சந்தங்களினால்...
கவிதை கண் முன்னே யாவையும் உணரச் செய்கிறது...
அருமையான படைப்பு...
வெற்றி நிச்சயம்...
வாழ்த்துக்கள்...
மேலும் மேலும் வளரட்டும் உங்கள் கவிதை படைப்புகள்..
29-Aug-2015 5:48 pm

இந்திராணி கோவிந்தன்... என்னைப்பற்றி என அவர் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை.... சொல்வதற்கு நிறைய இருப்பதைப் போலவே அவர் கவிதைகள் சொல்கிறது. வழக்கம் போலவே சிறந்த கவிதைகள் பலராலும் கவனிக்கப்படாமல் இருப்பது... வழக்கமான ஒன்றுதானே... நேரமிருப்பின் பாருங்கள்.. மிக எளிமையாக எந்தவித பகட்டும் இல்லாமல் அழகாகச் சொல்லப்பட்டிருக்கும் கவிதைகள் ... அவர் சமீபத்தில் பதிந்த "உன் கைக்கும் வேலை உண்டு..." கவிதை எண் 239566.. படித்துப் பாருங்கள்... அருமையான எழுத்தாளர்.. வரவேற்கிறோம்...!!
ஆயினும்
அவளது
அந்தக் கண்களில்
கண்டுபிடித்து விடமுடிகிறது
அவள் இன்னும்
சாப்பிட்டிருக்கவில்லை
என்பதை !
கவியின் கரு இதுவே ....மிக சிறப்பு நட்பே...
என்ன சொல்ல....
மிக அருமை PADAIPPU ... 11-Apr-2015 5:12 pm
"நீ என்னை
எழுதிட வேண்டும் எனக்கு
நான் உன்னை
வாசித்திட வேண்டும் உனக்கு.."
இப்படி எழுதுனா எப்படி வாசிக்காம இருக்க முடியும்?
கலக்கிடிங்க போங்க! 08-Jul-2015 10:50 pm
மிகவும் அழகான வரிகள்.. அருமையா கவிதை ..வாழ்த்துக்கள்
இப்படி ஒருவர் கிடைக்க கொடுத்துவைத்திருக்க வேண்டும் ..... எதை என்று சொன்னால் நானும் முயல்வேன். 25-Jun-2015 10:28 am
"உடை உடையென எவரும் கொக்கரித்தால் இனி
உடை உடையென உடைத்தெரிவோம்
கொக்கரிப்பவர்களின் கொம்புகளை. ." ------ உங்கள் கவிதைகள் போலவே அருமையான் கருத்து அமுதினி.. வாழ்த்துகள்.. 27-Mar-2015 11:18 am
கவிதை மிக அருமை.
வல்லுறவின்போது,அவள் ஒத்துழைக்க மறுத்தாள்.அதனால் கொல்லவேண்டியதாய்ப் போயிற்று..என்று கூசாமல் சொல்லப் பழகியிருக்கும் இந்தியாவின் மகன்கள் நிறைந்த தேசமிது...,
இந்த லட்சணத்தில் பெண்ணின் உடைகள்தான் என்னைத் தூண்டியது என்று சொல்லும் மிருகங்கள், போர்த்திக் கொண்டு போவதுதான் கலாசாரம் என்று சொல்கின்றன..!
சரி.போர்த்திக் கொண்டு போனவரகளையாவது விட்டுவைத்தார்களா எனில், குமரிகள் முதல் கிழவிகள் வரையும் சீரழித்தார்கள்..!
சரி,வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்ட பெண்,அல்லது சிறுமி,,உங்கள் சொந்த சகோதரியாகவோ,மகளாகவோ இருந்தால் இப்படி சீரழிப்பீர்களா..என்று கேட்டால்,மகளைக் கெடுத்த தந்தை,சகோதரியைக் கெடுத்த சகோதரன் ..என்றுகூட செய்திகள் வருகின்றன..!
இங்கு மாற வேண்டியது உடைகள் அல்ல..கயவர்களின் மனப் பான்மையே.. ! அதுவரை கலாச்சாரம்,பண்பாடு என்று சொல்லி பெண்களுக்கு வெளி போடுவது எல்லாமே வெற்றுப் பம்மாத்துதான் தோழி..!
பெண்களுக்காகப் பெண்களே..நமக்காக நாமே போராடி ஒரு நிலையை எட்டினால்தான் அது நிரந்தரம்..! இன்னும் நிறைய தொடர்ந்து எழுதுங்கள் யாழ்மொழி ..வாழ்த்துக்கள்..! 27-Mar-2015 11:16 am