வரவேற்பாளினி
அந்த
வரவேற்பாளினி
அவ்வளவு பாந்தமாக
இருக்கிறாள் !
அவ்வளவு
உற்சாகம்
பரப்பிக் கொண்டிருக்கிறாள்
அந்தச் சூழலுக்கு !
அவ்வளவு
புன்னகை
வழிந்து கொண்டிருக்கிறது
அவளிடம் !
அவ்வளவு
உறுத்தாமல்
இருக்கிறது
அவளது மேக்கப் !
அவ்வளவு
இயல்பு வெளிப்படுகிறது
அவளது
நுனிநாக்கு ஆங்கிலத்தில் !
அவ்வளவு
நேர்த்தியாயிருக்கிறது
அவ்வப்போதான
அவளது தலைகோதல் !
ஆயினும்
அவளது
அந்தக் கண்களில்
கண்டுபிடித்து விடமுடிகிறது
அவள் இன்னும்
சாப்பிட்டிருக்கவில்லை
என்பதை !