அட்சய பாத்திரம்

ராப்பாடிகள் பயணப் பட்டபோது
வீட்டில் தூர எறிந்த
எச்சில் இலையிலிருந்து
விழுந்து தெறித்த
ஒற்றை பருக்கையில்
ஓராயிரம் கோடிக்கும்பேர்
பசியாறினார்கள் ...

அந்த பருக்கை
அட்சய பாத்திரத்தின்
எச்சம்....

கொல்லப்பட்டறைகளும்
நெற் கழனிகளும்
குறட்டை விட்டன.....

பட்டினிச் சாவு
பாட புத்தகத்தில்
மட்டும் இருந்தது...

.விலைஉயர்ந்த பரிசுக்காரகள்
வீதிவீதியாய் தேடினார்கள் ..
அட்சய பாத்திரத்தையல்ல...
அப்படி ஒரு கதை சொன்ன
அந்த அறிவாளியை .....

அட்சய பாத்திரம் கொடுத்தவனின்
ஆலய வாசலிலோ
பிச்சைக் கார்கள்.

எழுதியவர் : சுசீந்திரன். (31-Mar-15, 10:44 am)
Tanglish : atchaya paathiram
பார்வை : 631

மேலே