ஏதேதோ நினைவுகள்

விடியும் வரை காத்திரு
அவன் மறைய விடியல் வந்திடும்
நீ பூத்திடுவாய்

முடியும் வரை மௌனித்திரு
அவன் கரைய இருள் சூழ்ந்திடும்
நீ மலர்ந்திடுவாய்

நீரிலே இருந்தாலும் மௌவல் அழுகும் நிலைக்கு வாராது

வானவில்லாய் கலையும் சினத்தால் மனதிலே வன்மும் தோன்றாது

மலர்ந்திடும் மலர்களின் வாசனை காற்றில் கலப்பது இயல்பானது


உள்ளுக்குள்ளே வலியிருந்தும் வெளியில் மெய்யாய் சிரிக்கவும் இயலாது

முகிலின் மழைத்துளி மண்ணில் விழுந்து பல விருட்சங்கள் செழித்து வளருது

கண்களின் நீர்த்துளி கண்ணங்களில் வழிந்து நெஞ்சங்கள் பல சோகத்தில் வாடுது

தினமொரு கோலமிட்டு வீட்டின் வாசல் அழகு பெறலாம்
நித்தமொரு ஆசை கொண்ட உள்ளம் என்றுமே அமைதி பெறாது

மலரும் மொட்டுக்கள் மரணத்தை நினைத்து சோர்ந்து போயிருந்தால் பிறவி பலனையது அடைந்திடாது

முடியாது என்று நினைத்து
முயற்சி செய்யாதிருந்தால்
விதை விருட்சமாகி கனிகள் தந்திடாது

விழிகளை மூடி கனவு கொண்டு உழைக்காது இருந்துவிட்டால் வெற்றியை வாழ்வில் காண இயலாது

முழு நம்பிக்கை கொண்டு
முடியும் வரை போராடினால் முடியாதென்று ஒன்றுமில்லை மரணத்தை கண்டு அஞ்சாத மலர்களாய் நாமும் மலர்வோம்......

எழுதியவர் : இதயம் விஜய் (31-Mar-15, 11:18 am)
சேர்த்தது : இதயம் விஜய்
Tanglish : ethetho ninaivukal
பார்வை : 95

மேலே