தருங்கல்ப காயத் தமிழ்
ஒருவிகற்ப பாட்டி லிருவிகற்ப பாட்டை
தருங்கல்ப காயத் தமிழ்
********************************************
மனமுவந்து சக்திக்கோர் பாகம் பகிர்ந்து
தினம்நடந்தே பக்தருக்காய் சென்றாரே தூது.
கனலெடுத்தான் கையிற் கயிலாயன் கங்கை
புனலொளித்தான் கொண்டை பொதிந்து.
கனலெடுத்தான் கையிற் கயிலாயன் கங்கை
புனலொளித்தான் கொண்டை பொதிந்து – தினம்நடந்தே
பக்தருக்காய் சென்றாரே தூது மனமுவந்து
சக்திக்கோர் பாகம் பகிர்ந்து
கனலெடுத்தான் கையிற் கயிலாயன் கங்கை
புனலொளித்தான் கொண்டை பொதிந்து – மனமுவந்து
சக்திக்கோர் பாகம் பகிர்ந்து தினம்நடந்தே
பக்தருக்காய் சென்றாரே தூது.