அவலத்தின் நொடிகள்
எவனோ குடித்துவிட்டு
வீசிச்சென்ற
காலிப்பாட்டில்கள் ...
மட்கிப் போகாத
உடைந்து போன
நெகிழி கழிவுகள் ...
சுகாதாரமற்ற
சுருட்டி வீசப்பட்ட
காகித குப்பைகள் ...
என எல்லாவற்றையும்
அள்ளித் திணித்து
தன் கோணிப்பையுடன் ...
பயணிக்கும்
அச்சிறுவனைக்
காண்கையில் ...
ஊரைச்சுத்தமாக்குமவன்
உழைப்பைக்கண்டு
உள்ளம் குளிரும் ...
ஆனாலும்
கல்வி கற்கும் வயதில்
காகிதம் பொறுக்குமவன்
அவலம்கண்டு
அடுத்த நொடி
உருளும் உப்புநீர்த்துளிகள்
கண்களுள் தானாய்...
------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்