வேடிக்கை பார்க்க வந்தேன் வேடதாரி ஆகி விட்டேன்…
கடவுள் என்னை பூமிக்கு அனுப்ப
உலகின் வாழ்க்கை நாடகத்தை
வேடிக்கை மட்டுமே பார்க்க வந்தேன்
என் தாயும் தந்தையும் எனை பார்த்து சிரிக்கையில்
நானும் வேடதாரி ஆகி விட்டேன்
முதலில் கிடைத்தது மகனென்ற வேடம்
அதை அழகாய் நடித்திட ஆவல் கொண்டேன்
வளர்ந்து நானும் ஆளாய் மாற
மற்றொரு வேடம் ஏற்று நின்றேன்
காதலனாக அவளிடம் ஏற்ற வேடம்
கணவனாக மாற கண்டேன்
ஏற்ற வேடம் முழுதாய் முடிப்பதற்குள்
தந்தையாக மேலும் ஒரு வேடம்
அத்தனை வேடமும் ஒருசேர நடித்த என்னை
எண்ணி நானே பெருமை கொண்டேன்
என் மனைவியிடம் அதை சொன்ன போது
அவளும் அது போல் இருக்க கண்டேன்
எல்லோரும் நாடகவாசி என்பதை
அந்த நொடியில் நானும் புரிந்து கொண்டேன்
மேடை நாடகம் போடும் மனிதனை
காணும் போது சிறிது கொள்வேன்
வாழ்க்கையில் போடும் வேடம் போதாதென்று
மேடையிலும் வேடமா என எண்ணி கொண்டேன்
ஏற்ற வேதங்கள் செவ்வென நடித்து
விடைபெறும் நாளை எதிர் பார்த்து நின்றேன்
நாளும் வந்தது நாடகம் முடிந்தது
வேடம் கலைத்து போகின்றேன்….!!!