உன்னை போல் ஒருவன்- பணத்தால் மட்டும் ஏழை
அவனது சோக கதையை கேட்பதற்கு
மனதில் எவர்க்கும் ஈரமில்லை
அதை கேட்கும் எண்ணம் கொண்டவர்க்கு
அன்பு என்பது ஏதும் இல்லை
பிறரை சிரிக்க வைப்பவனை
சிரிக்க வைக்க யாருமில்லை
நாளும் அழுது தேய்பவனை
கண்டு கொள்ள நாதி இல்லை
இலவசம் தந்து மக்களை கவர
அரசியல் அவனும் அறியவில்லை
இலவசமாய் அவன் தருவதற்கு
அவன் உயிரை தவிர ஒன்றும் இல்லை
பசித்து கிடக்கும் வயிற்றுக்கு
சோறு போட யாரும் இல்லை
பிச்சையாக எதுவும் தந்தால்
அவன் கையை நீட்டி வாங்குவதில்லை
உழைத்துழைத்து தேய்ந்த உடலில்
எலும்பை தவிர ஒன்றும் இல்லை
அவனுக்கென்று சொந்தமாக
ஆறடி நிலத்தை தவிர ஏதுமில்லை
அதுவும் அவன் இறந்த பிறகே
வாழும் போது சொந்தமில்லை