குறள் வெண்பா
அனைவருக்கும் வணக்கம், அலுவகப் பணியின் பொருட்டு இத்தளத்தில் கவிதைப் பதிவையிடாமல் இருந்தேன் இன்று குறள்வெண்பாவில் மூன்று குறள்களை பதிவிட்டுள்ளேன், வாசித்து விமர்சிக்கவும்.
உழைப்பை உணர்ந்து உழைத்தால் உழைப்பது
ஊழை விரட்டும் உழை
அண்டிப் பிழைத்தவர் ஆளும் நிலையிலே
தண்டனைக்கு சட்டங் களே
இருப்பின் இருப்பை இருப்பாய் இறுத்தின்
இருப்பிற்கில் லையே இடர்
-- நன்னாடன்