எனக்கும் ஆசைகள் தான்
எனக்கும் ஆசைகள் தான்
நீ வாழ்ந்து கழித்த நிகழ்வுகளை எல்லாம் நானும் காணலாகாதா?
கண்ணில் தோன்றிய சில கனவுகள்
என் எதிர்காலம் பார்த்த கண்ணாடி எல்லாம் என் கண்முன்னே உடைத்து நொறுக்கியதை கண்டேனே
உன் போல் நானும் வாழ்ந்திடல்க்கூடாதா?
தெரிந்து செய்தாயோ!
தெரியாமல் செய்தாயோ! நின்றன்
செய்தொழில் பாவமன்றோ?
நானும் வாழ்ந்தொழியக் கூடாதா?
எனக்கும் மனமுண்டு
எனக்குள்ளும் இன்பம் தும்பம் இரண்டும் உண்டு
அவையெல்லாம் உன்னிடத்தே பகிர்ந்தேனே! நானும் உன்போல் வாழ்ந்திடல் கூடாதா?
எதில் தோற்றுப் போனாலும்
எனைத் தேற்ற நீயிருந்தாய்
என்றெண்ணியே வாழ்ந்தேனே
உன் போல்
நானும் வாழ்ந்திடக்கூடாதா?
- அருள்(கல்லறை)செல்வன்