பாவமா புண்ணியமா
பாவமா? புண்ணியமா?
09 / 12 / 2024
சடைகள் போல் சவால்கள்
பின்னிப் பிணைந்து வந்தாலும்
மடைகள் திறந்த வெள்ளமென
சீறிப் பாய்ந்து சிதைத்துவிடு.
ஊட்டிவிட இன்னும் கைப்பிள்ளையா நீ?
ஊனமா நீ? கால்களில்லை?
செவிடா நீ? செவிகளில்லை?
குருடா நீ? விழிகளில்லை?
ஊமையா நீ? வார்த்தையில்லை?
பிணமா நீ? உயிர்ப்பு இல்லை?
வாய்மையை வார்த்தையில் வை.
பொய்மையை தூரத்தில் வை.
நேர்மையை நெஞ்சினில் வை.
புன்னகையை இதழினில் வை.
கடும் உழைப்பை வாழ்வினில் வை.
நேர்மறையை நடையினில் வை.
எல்லாவற்றிலும் உனக்கும்
ஒரு பங்கு உண்டு.
எல்லாவற்றிலும் உன்பங்கும்
அதில் நிறைய உண்டு.
நான்தான் என்கின்ற
இறுமாப்பு உனக்கெதற்கு?
மேடையிலே நடிக்க வந்தோம்.
நாடகம் முடிந்தபின்
கூலியை பெற்றுக்கொண்டு
போகவேண்டியதுதானே.
கூலி...
பாவமா? புண்ணியமா?