கிறிஸ்துமஸ் நன்னாள்
கிறிஸ்துமஸ் நன்னாள்
அந்தி வானத்தில் தோன்றியது ஒரு நட்சத்திரம்
ஆவின் கொட்டிலில் அழகு மகவொன்று பிறந்தது
இனிய முகத்தோடு இருக்கும் அந்த மகவைக் கண்டு
ஈன்றவள் உள்ளம் பூரித்து மகிழ்ச்சி அடைந்தாள்
உன்னதமாக அந்த மகவு மக்கள் நலனைக் காக்க
ஊருக்கெல்லாம் நல்வழி காட்டி உபதேசம் அளிக்க
எல்லோரும் அந்த மகனை ஏசுநாதர் என அழைக்க
ஏசுநாதரும் நம்மை காக்க பத்து வழிகள் அமைத்து
ஐயமுள்ள மனங்களை அமைதி படுத்தி வைத்து
ஒருமையுடன் பிராத்தனை செய்வதைப் போற்றி
ஓங்கி மக்கள் வளர்ந்திட நல்ல வழி கொடுத்தவர்
ஏசுநாதர் பிறந்த நாளை நாம் அவரை நினைத்து
இந்நன்னாளில் அவரை வணங்கி கொண்டாடுவோம்
புத்தாடை உடுத்தி நள்ளிரவில் பிராத்தனை செய்து மகிழ்வோம்

