ஆனந்த ஸ்ரீ - சுயவிவரம்
(Profile)
                                
எழுத்தாளர்
| இயற்பெயர் | : ஆனந்த ஸ்ரீ | 
| இடம் | : கரூர் | 
| பிறந்த தேதி | : 25-Oct-1983 | 
| பாலினம் | : பெண் | 
| சேர்ந்த நாள் | : 02-Jun-2013 | 
| பார்த்தவர்கள் | : 920 | 
| புள்ளி | : 114 | 
            
        கவிதைகள் படிக்க எழுதிப் பழகப்  பிடிக்கும்.
வழி காட்டும் நல்லோரை மதிக்கப் பிடிக்கும்.
இனி உங்கள் வழி என் வழி..!
    
கவிதை சொல்லும் கதைகள் -3 
------------------------------------------------- ------   -----------------------------
“தம்பி..வணக்கம்..! டைரக்டர் சார் இருக்காரா..?” மையமாகக் குளிரூட்டப்பட்ட அந்த அறையின் ஏ.சி.வீணாகிவிடக் கூடாது என்று அளவாய்த் திறந்த கதவின் முன் கைகூப்பியபடி நின்றுகொண்டிருந்தார் வெங்காய மண்டி வெங்கடேசன். எங்களுக்கெல்லாம் வி.எம்.வி. அவருடைய இடதுபுற கக்கத்தில் அமர்ந்திருந்த கைப்பையின் கனம் அதிகமாக இருந்திருக்க வேண்டும்.குவித்த கை இறக்கியவுடன்,வலது கையால் அதனை இறுகப் பிடித்துக் கொண்டார்.
“சார்..இப்ப வந்துருவாரு..உள்ள வந்து உக்காருங்க..!” என்றான் ப.ரத்தினகுமார். எதிர்காலத்தில் ப
கருமை சூழ்
கார்மேகங்களுடன்
காரை வீட்டுக்கு
குடை பிடிப்பது போல,
படையெடுத்து வந்தது
பெருமழை...!!
இரவின்
இருள் தனிமையில்
சொட்டுச் சொட்டாய் விழுந்த
மழைத் துளியும்
மோகினிப் பேயின்
கால் கொலுசாய்
காதில் சினுங்கியது ...!
குளிரின் தனிமையில்
அணைப்பதற்கு
விளக்கைத் தவிர
யாதுமில்லை என்பதால்,
கையோடு கை தேய்த்த
வெப்பத்துடன்
வெக்கம் தான் மிச்சம் இருந்தது..!
சன்னல் வழி
கம்பிகளின் ஊடாக
எதிர் வீட்டு ஓட்டில் வழியும்
சொட்டு நீரை எண்ணும்
பழக்கம் இருப்பதால்,
சாரல் மழையின்
சொட்டு எண்ணிக்கை
விட்டதில் இருந்து தொடர்ந்தது..!!
காற்று வேகமானதில்
மழையின் முகம்,
திருவிழா கூட்டத்தினுள்
அ
நடுநிசியில் திடுக்கிட்டு 
விழித்த நொடியில் 
ஓடிக்கொண்டிருந்த 
மின்விசிறி நின்றதும் 
நிசப்தத்தில் சிலநொடி 
நின்றது மனமும் ...
வெளிச்சத்தைத் தூண்ட
அருகினில் வைத்த 
அலைபேசியைத் தேடி 
அனிச்சை செயலாய்
துலாவுகிறது கை ...
இரவு சரியாக மூடப்படாத 
குழாயிலிருந்து 
சொட்டிக்கொண்டிருக்கும் 
நீரின் சப்தம் 
மனதுள் சலனத்தை எழுப்ப... 
சரியாக தாழிடப்படாத 
சன்னல்களின் திரைகள் 
காற்றில் அசைகையில் 
ஏதோவொரு புது கலக்கம்
என்னுள் திடும்மென எழ ...
கொசுவலைக்கு மேல்
யதேச்சையாய் விழுந்த 
பல்லியின் நகர்தல் 
பயத்தை மேலும் கூட்ட ...
மெல்லிய விசில் சப்தம்
அருகினில் வர வர 
கடமை தவறா சகமனித 
நியூட்டனோடு நீயும் 
இருந்திருந்தால் மூன்றாம் 
விதி இல்லாது 
போயிருக்கலாம்... 
நீ பார்த்துச் சிரிக்கும் போது
ஒன்றும் செய்ய இயலாது 
போயிருந்த 
என் எதிர்வினைகளைப் போல....
பிதாகொரஸ் தேற்றம் 
ஞாபகத்தில் இல்லை.... 
மறக்கவே முடிவதில்லை...நீ 
பிதாகொரஸ் தேற்றம் 
சொன்னது....
மியூஸேசி... ஆஸ்ட்ரேசி..
என பூக்களின் 
குடும்பத்தில் உன் பெயர் 
ஏன் விடுபட்டது...?
இருகை வேழத்து...
இல்பொருள் உவமைக்கான 
எ.கா சொல்லியிருக்க..
எனக்குத் தோன்றியது..
பூக்களின் நடுவில் 
பூந்தோட்டம்...
நீ பிடித்திருந்த 
சோதனைக் குழாயில் 
உப்புக் கரைசல் 
சர்க்கரைக் கரைசலாகி 
விட்டிருந்தது...
உணவு இடைவே
கணுக்கால் புதைகிறது 
சுடு மண்ணில்..!
முங்கிக் குளித்தது 
மனக் கண்ணில்..
ஆற்றுநீரின் சப்தம்
காதில் நிறைந்தது  ஒருகாலம்.!
மணல்  லாரிகளின் சப்தம் 
இப்போது அலங்கோலம்..!
பசித்தவன் வயிற்றுக்கு
அமிர்தமாய் இருந்தது  ஆறு...
இந்த ஆற்றை திருடி 
புசித்தது இப்போ யாரு..?
மரம்வெட்ட போன மறத்தமிழன் மேனி
மரமாகிச் சாயத் துடித்தோம் – சரமாரி
என்றே  பொழிந்த எதிராளித் தோட்டா
சினம் கண் டெழுந்தோம் சிவந்து. 
உயிரெடுக்குந் தெய்வ உருவெடுத்து விட்டோம்
கயிறாய் திரித்திடுவோம் தமிழன் உயிரை
பயிராய் அறுக்கும் பகைவன் திமிரை
தயிராய்க் கடைவோம் துணிந்து.
காட்டு மகமாயி காளி வழிகாட்ட
நாட்டில் நலிந்த தமிழரினி – கூட்டுக்
குயில்போல் குமுறும் நிலைமாற்றிக் காட்ட
எயிலாய் இருப்போம் இணைந்து.
(எயில் –அரண்) 
படத்துக்கான கவிதை நன்றி வல்லமை
(வல்லமை இணைய இதழ் நடத்திய படக்கவிதை போட்டியில் வெற்றி பெற்றக் கவிதை )
வணக்கம் தோழர்களே..!
யுகம் தாண்டும் சிறகுகள்..பகுதியில் நானும் எழுதுவதற்கு தோழர் கவித்தா சபாபதி வாய்ப்பு அளித்த போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.மேலும் அழகான எல்லை மீறலில்..என்று அவர் குறிப்பிட்டிருந்தது கூடுதல் மகிழ்ச்சி. காரணம்,குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்குள் நின்று எழுதுவதென்ற இறுக்கம் தளர்ந்துவிட்டது.அதனால்,சுதந்திரமாகப் பேச எனக்யொரு வாய்ப்பு.
இயல்பாக எழுதத் துவங்கி,இக்கட்டுரை முடிவுற்றபோது,அதனை மூன்றுபாகங்களாகப் பதிவு செய்யவேண்டிய அளவில் இருந்தது.அதனால் என்ன..? எல்லைமீறல் என்பது இங்கு அனுமதிக்கப்பட்டு விட்டபடியால், நானும் எனது சுதந்திரத்தின் எல்லையை சற்று பரவலாக்கிக் கொண்டேன். 17,18,19
"உன் பிடிவாதம்
எனக்கு பிடிக்கிறது
அதனால் தான்
இதயம் கிடந்து துடிக்கிறது.!"  --என்பது மு.மேத்தாவின் வரிகள்.காதல் என்ற வார்த்தையே இன்றி நீளும் ஒரு காதல் கவிதை.
"நீ 
நீயாகத்தான் இருக்கிறாய்.
நான்தான்
நானாக இல்லை.. "  என்ற வரிகளும் காதல் குறித்த அவரது வரிகளே..!
"ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம் .!    -- ---- நா.முத்துக்குமாரின் இந்த வரிகளும்,காதலின் வலியையும்,விருப்பத்தையும் அழகாகச் சொல்கிறது.
 
இதேபோல் “பூக்கள்” எனும் வரிசையில் தோழர் வெள்ளூர் ராஜா எழுதிய கவிதைகளைப் படித்தபோது காதலை, வரிகளில் சொல்லாமல் வாசிப்ப
“கிறுக்கல் வாழ்க்கையில்
ச
   று
      க்
        கி
           ய
எங்களின் விதிக்கோடுகளை
யார்தான்
ஓவியமாக்கப் போகிறீர்கள்..?”
-------
“ஒன்றே தெய்வம் என்றுரைக்கும்
உத்தமர்கள்..
தமக்குத் தொண்டு செய்கிற
சாம்பானை..
ஊர்க்குளத்தில் நீரெடுக்க 
விடுவதில்லை
ஏன் எனில்
குலம்வேறு, குளம்வேறு..!”
-----
“அனுதினமும் பட்டினியால்
அல்லாடும் எங்களை
யாருக்கும் தெரிவதில்லை.
அரசியல்வாதியின் உண்ணாவிரதம்
நாட்டுக்கே தெரிந்துவிடுகிறது.!”
--------
“வரவு பிரேக்போட்டு
நிற்கும்போது
செலவு மட்டும்
ஆக்சிலேட்டரை
அழுத்தித் தொலைக்கிறது.?” - வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்ற இந்தக் கவிதைகள் கடந்த சில
1.படித்ததில் பிடித்தது..!
-----------------------------------
செஞ்சாந்தின் பின்னணி-யாழ்மொழி
----------------------------------------------------------
மூர்க்கத்தன ஆண்மையால் 
முடக்கப்பட்ட பெண் சுதந்தரம் .. 
ஆடை அலங்காரப் பேச்சால் 
அலங்கரிகப்படுவது ஏனோ ? 
துகிலுரியப்பட்ட பாஞ்சாலிகள் 
சேலை கட்டியச் செய்திகளை 
திரைக்குப் பின்னே மறைத்து 
வைத்தது ஏனோ ? 
கைம்மையான கன்ணகிகளின் 
சேலையை விலக்கத் துடிக்கும் 
செஞ்சாந்தின் பின்னணி விமர்சிக்கப் 
படுவதில்லை ஏனோ ? 
மழலையையும் மாய்த்துவிட்ட (...)
2.படித்ததில் பிடித்தது..
----------------------------------
தேர்வுக்கு வேண்டும் ஒரு தேர்வு
--------------    --------------  ------------------
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள விஜய் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் வாட்ஸ் அப் மூலம் வினாத்தாளை தாங்கள் பணி யாற்றும் பள்ளிக்கு அனுப்பியது தமிழகத்தில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.வாட்ஸ் அப் மூலம் வினாத்தாள் அனுப்பப் பட்ட பிளஸ் 2 கணிதத் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மாணவி ஒருவர்  (...)