எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

1.படித்ததில் பிடித்தது..! ----------------------------------- செஞ்சாந்தின் பின்னணி-யாழ்மொழி ---------------------------------------------------------- மூர்க்கத்தன...

1.படித்ததில் பிடித்தது..!
-----------------------------------
செஞ்சாந்தின் பின்னணி-யாழ்மொழி
----------------------------------------------------------
மூர்க்கத்தன ஆண்மையால்
முடக்கப்பட்ட பெண் சுதந்தரம் ..
ஆடை அலங்காரப் பேச்சால்
அலங்கரிகப்படுவது ஏனோ ?

துகிலுரியப்பட்ட பாஞ்சாலிகள்
சேலை கட்டியச் செய்திகளை
திரைக்குப் பின்னே மறைத்து
வைத்தது ஏனோ ?

கைம்மையான கன்ணகிகளின்
சேலையை விலக்கத் துடிக்கும்
செஞ்சாந்தின் பின்னணி விமர்சிக்கப்
படுவதில்லை ஏனோ ?

மழலையையும் மாய்த்துவிட்டு
மன்னன் வேடம் போடுகின்ற
கயவர்களின் மத்தியில் -நவீன
ஆடையில் மட்டும் கலாச்சாரத்தை
தேடுவது ஏனோ ?

பதிவு : ஆனந்த ஸ்ரீ
நாள் : 27-Mar-15, 12:06 pm

மேலே