எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

2.படித்ததில் பிடித்தது.. ---------------------------------- தேர்வுக்கு வேண்டும் ஒரு தேர்வு...

2.படித்ததில் பிடித்தது..
----------------------------------
தேர்வுக்கு வேண்டும் ஒரு தேர்வு
-------------- -------------- ------------------

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள விஜய் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் வாட்ஸ் அப் மூலம் வினாத்தாளை தாங்கள் பணி யாற்றும் பள்ளிக்கு அனுப்பியது தமிழகத்தில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.வாட்ஸ் அப் மூலம் வினாத்தாள் அனுப்பப் பட்ட பிளஸ் 2 கணிதத் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மாணவி ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் இந்த தேர்வை ஏன் மீண்டும் நடத்தக்கூடாது என்பது குறித்து விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்களை தவறு செய்யத் தூண்டிய தனியார் பள்ளி நிர்வாகம் குறித்து கல்வித்துறை கேள்வி எழுப்ப மறுக்கிறது. மாறாக ஆசிரியர்களை மட்டும் பலிகடாவாக்க முயற்சி நடைபெறுகிறது. மேலும் தேர்வு எழுதும் அறையில் மாணவர்கள் காப்பி அடிப்பது போன்ற முறை கேடான செயல்களில் ஈடுபட்டால் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு தேர்வுத்துறை இயக்குநரகம் பிறப்பித்துள்ள உத்தரவு ஆசிரியர் களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

நாமக்கல், சேலம் உள்ளிட்ட சில மாவட்டங் களில் இயங்கும் தனியார் பள்ளிகள் பல்வேறு வகையான தகிடு தத்த வேலைகளில் ஈடுபடு கின்றனர். மாணவர்களை மதிப்பெண் பெறும் எந்திரங்களாக மாற்றும் வகையில் பிளஸ் 1 பாடத்தை நடத்தாமல் நேரடியாக பிளஸ் 2 பாடம்நடத்துகின்றனர். எந்த நேரமும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக் கப்படுவதால் இத்தகைய பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்ட துயர நிகழ்ச்சிகள் நடந்தன. முதல் மதிப்பெண் பெறும் பள்ளி அடுத்தாண்டு பெரும் வசூலை வாரிக்குவிக்கும் என்ற நிலையில் இதில் கூட முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது.தேர்வில் முறைகேட்டை தடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் தேர்வு முறை குறித்த ஒரு ஆழமான பரிசீலனை தேவைப்படுகிறது. இப்போதைய தேர்வு முறையில் மாணவர்களின் மனப்பாடத் திறன் மட்டுமே பரிசோதிக்கப்படுகிறது. பிளஸ் 2 பாடங்களை அப்படியே மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பவர்கள்தான் அறிவாளிகளாக கருதப்பட்டு உயர்கல்வி சேர்க்கையில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனால் எப்படியாவது அதிக மதிப்பெண் பெற்றுவிட வேண்டும் என்ற மனவியல் நெருக்கடிக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். பிளஸ் 2 அல்லது 10வது வகுப்புகளுக்கு இறுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்பதற்கு பதிலாக செமஸ்டர் முறையில் தேர்வுகளை நடத்தலாம்.

மனப்பாடத் திறனை மட்டும் பரிசோதிப்பதற்கு பதிலாக மாணவர்களது முழுமையான திறனைபகுதி, பகுதியாக மதிப்பிடும் வகையில் தேர்வுமுறை அமைவது அவசியம். கல்வித்துறையை குறிப்பாக உயர்கல்வித்துறையை அரசுகள் கொஞ்சம் கொஞ்சமாக கை கழுவி வருகின்றன. கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஏழை மாணவர்களுக்கு உரிய இடம் ஒதுக்கப்படுவதில்லை. மொத்தத்தில் தமிழக கல்விச்சூழல் குறித்து விரிவான விவாதம் நடத்தப்படுவது அவசியமாகும்.
-------------------- ------------------ ------------------------

பதிவு : ஆனந்த ஸ்ரீ
நாள் : 27-Mar-15, 11:58 am

மேலே