அமுதினி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அமுதினி |
இடம் | : சிதம்பரம்-தமிழகம் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 11-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 251 |
புள்ளி | : 153 |
நான் ஒரு கவிதை.காதல் எனக்கு பிடிக்கும். காதலுக்கு என்னை பிடிக்காது
புலி பதுங்கி இருக்கும்
காடு அவள்...
நுழைவதும்
சிரமம்..
வெளியேறுவதும் சிரமம்...
காடு கொண்ட
வளைவுகளில்
தொலைவது மட்டும்
சுலபம்...
கருந்துளை
கவிழ்ந்து கிடக்கும்
ஒரு பதுங்கலாய்...
நான் வழி தொலையும்
ஒற்றை
யானையின் பிளிறலோடு..
மனதை
வாரிக் கொண்டே
முயங்குகிறேன்...
ஆடைகளற்ற
வானமாய்
ரோமங்களின் சிலிர்ப்போடு
வண்ணம் மாறுகிறது
எங்கள் இரவு....
எங்கள் நிர்வாண
பிரதேசங்களில்
நாங்கள் வெட்கம்
தின்று ஒருவரையொருவர்
கொல்லுகிறோம்....
உறுதி கொண்ட
கண் ஒன்றும்,
உயரம் நின்ற
பண் ஒன்றும்,
இரு நிலாக்களும்,
இன்ன பிற
உலாக்களும்,
பேய் பிடித்து
நகர்கின்றன,
விடியலை நோ
கணினியின் கற்பனை
~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பரிமாற்றத் தவறினில்
தரத்தினை மதிப்பிடும் இணையத்தின்
அதிவேகத் தேடலை நிறுத்தி - ஓர்
--உலாவியின் தாவல் அடைப்பினுள்
--எனைமறந்த மந்திரப் பிறவி நீ ..!
கோப்பு பகிர்தலின் முடிவில்
சிதறி சிதையும் சிறு அடைவையும்
மறுச் சுழற்சியின் மகத்துவத்தால்
என்மனதை மீண்டும் மீட்டெடுத்து
--அடைவினுள் அசையாமல் உறங்கும்
--புகைப்பட புன்னகைப் புதையல் நீ ..!
இணையத் தொடர்பு துண்டிப்பால்
உயிர் இழக்கும் கணினியின்
உள்ளீடு திரையின் மின்னணுவினுள்
--மிரளாமல் மிதந்து அசையும்
--உன் கன்னம் வரைந்தக் காதலில்
--கணினியின் கற்பனைக் காதலி நீ ..!
-
சொற்க்கோர்வையில் வீரியம். ஆழம்.
---------------------------------------------------------------------
’ சாகா மருந்து ’ எனும் கவிதையில் சித்ரா ராஜ்
அனைத்தும் கண்ட இறைவன்
அசந்தே போனான்
மரணம் உண்டெனும் போதே
பணத்திற்கும் பதவிக்கும்
நாக்கை தொங்க விட்டவன்
சாவே இல்லா சாஸ்வதம் பெற்றால்
என்னைக் கொன்று
ஏழு லோகமும் பிடித்திடுவானே?
அரக்கனை விட
அரசியல் வியாதி கொடிது
அலறிய கடவுள்
அழித்தே விட்டான்
அமுத குப்பியை....
நண்பர்களே என்னுடைய கவிதை ஒன்று இந்த வார குங்குமம் புத்தகத்தில் வெளியாகியுள்ளது.. 'அடையாளம் தேடும் முகங்கள்' என்னும் கவி கட்டுரை நண்பர்களே...
- கிருத்திகா தாஸ்...
சுடும் தீயில் எண்ணெய் ஊற்றி
அதில் கவிஞனை நிறுத்தி
மனவலிமையோடு எழுதினால் மட்டுமே
நீ கவிஞன்
தன்மான மனிதன்
என எரிச்சலூட்டி
எச்சில் ஊற்றி
பாதங்களையும்
எழுதுபவர்களின் பாக்களையும்
சீரழித்து சீழ்பிடிக்க வைப்பதா
இலக்கியத்தின் சேவை ?
வியந்து ரசித்த வரிகள்
..........................................
வெண்கலச் சிறகிருந்தும்
மழைகாலங்களில்
மட்டுமே
பறக்கும் புற்றீசல் நான் -
எனவே
எந்தக் கள்ளப்பருந்தும்
என்னைக் கொத்திக் குதறலாம் !
இறந்தகாலப் பெருமை
பேசிப் பேசியே
நிகழ்காலத்தில்
பிணமெனக் கிடக்கும்
இழிகுலம் நான்
எனவே
எவனுமென் அனுமதியின்றி
என்னைக் குழிதோண்டிப்
புதைக்கலாம் !
‘நான் தமிழன்’ எனும் கவிதையில் ’ லம்பாடி எனும் பாலா’
அதிரடியாக ரசிக்கவைத்த வரிகள்
............................................................
என் கணுக்கால் கண்டு
உன் ஆண்மை அஞ்சும்
பலவீனமானவனா நீ....?
ஆம் எனில்
எனைத்தொடரும் உரிமை
உனக்கில்லை....!!
‘என்னோடு வா’ எனும் கவிதையில் கவிஞர் வித்யா
நண்பர்களே வெயில் காலம் தொடங்குகிறது ..
நாம் சமாளித்து கொள்வோம் வீடுகளில் இருந்து.
பாவம் பறவைகள் அவை எங்கு செல்லும் ..
ஏற்கனவே மரங்களை அழித்து நாம் வீடு செய்து விட்டோம் ...
எனவே அவைகளுக்காக ...தினமும் உங்கள் விட்டின் மாடியில் அல்லது வெளிப்புறத்தில் ..
பறவைகள் அவை தாகம் தீர்க்க கொஞ்சம் தண்ணீர் வையுங்கள்
முடிந்தால் சிறிது தானியம் வையுங்கள் .....
பாவம் அவைகளுக்கு கண்டிப்பாக பயன் படும் ....
முடிந்த வரை இதனை நண்பர்களுடன்,உங்கள் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ...
Cine Director Shankar & Cine Music Director A .R . Rahman - இருவரும் சினிமாவில் புரட்சி செய்த ஆரம்ப காலத்தில்......