கணினியின் கற்பனை - தேன்மொழியன்
கணினியின் கற்பனை
~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பரிமாற்றத் தவறினில்
தரத்தினை மதிப்பிடும் இணையத்தின்
அதிவேகத் தேடலை நிறுத்தி - ஓர்
--உலாவியின் தாவல் அடைப்பினுள்
--எனைமறந்த மந்திரப் பிறவி நீ ..!
கோப்பு பகிர்தலின் முடிவில்
சிதறி சிதையும் சிறு அடைவையும்
மறுச் சுழற்சியின் மகத்துவத்தால்
என்மனதை மீண்டும் மீட்டெடுத்து
--அடைவினுள் அசையாமல் உறங்கும்
--புகைப்பட புன்னகைப் புதையல் நீ ..!
இணையத் தொடர்பு துண்டிப்பால்
உயிர் இழக்கும் கணினியின்
உள்ளீடு திரையின் மின்னணுவினுள்
--மிரளாமல் மிதந்து அசையும்
--உன் கன்னம் வரைந்தக் காதலில்
--கணினியின் கற்பனைக் காதலி நீ ..!
- தேன்மொழியன்