காதல் வந்தால்
உலகமே புதுசா தெரியும்...
உயிரோட இருக்குறத உணர்வோம்....
வாழணும்னு ஆசை வரும்....
அம்மா மடிக்கு அப்புறம் - அவ
மடியில படுக்கணும்னு மனசு ஏங்கும் ...
நிலாவ கட்டிபுடிச்சி தூங்கனு போல இருக்கு...
சூரியனுக்கும் முத்தம் குடுக்க - உதடு துடிக்கும் ...
நட்சத்திரத்த எல்லா ஒன்னா கோர்த்து - அவ
காலுக்கு கொலுசு போடணும்னு தோணும் ...
மின்னல பூமாலை கட்டி அவளுக்கு போட சொல்லும்..
அவ திரும்பி பார்த்தா உலகத்தியே
ஒத்த கையில தூக்ர சக்தி வரும்...
அவ நெருங்கி வரும் போது - இதயத்துல
ஆயிரம் இடி இடிக்கும்...ஒவ்வொரு
நொடியும் இதயம் செத்து செத்து பொழைக்கு...
அவ நூறுஅடி தூரத்துல வந்தாலும் - அவ
வாசத்த தேடி உயிர் பறக்கும்..
கண்ணதாசன், வாலி, வைரமுத்து - இவங்க
எல்லாம் நமக்குள்ள கூடு விட்டு கூடு பாய்வாங்க...
மரம்,செடி,பாறை ,புல்வெளி, மலை, மேகம் - இதெல்லாம்
நம்ம ஓடி புடிச்சி வெளையாட நம்ம கிட்ட குடுத்த மாதிரி தோணு ...
அக்ஷய பாத்திரத்ள சாப்டாலும் பசி அடங்காது... - ஆனா
அவ எச்சில் பட்டா எட்டு வருஷத்துக்கு பசிக்காது...
ஆயிரம் பேரு இருந்தாலும் அவ முகம் தெரியும் - ஆனா
பக்கத்துல இருக்குற நண்பன் முகம் - நம்ம கண்ணுக்கு தெரியாது....
அவல தவிர மத்த எல்லா பொண்ணுகளும் - நம்ம
அம்மாவோட ஜெராக்ஸ்-ஆ தெரிவாங்க ...
மொத்ததுல.. கண்ணு இல்லாத காதலுக்கு... - நம்ம
உயிர் இருக்ற இடம் தெரியும்....