வசுந்தரா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வசுந்தரா
இடம்:  கும்பகோணம்
பிறந்த தேதி :  03-Jun-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Apr-2015
பார்த்தவர்கள்:  87
புள்ளி:  61

என்னைப் பற்றி...

Lecturer

என் படைப்புகள்
வசுந்தரா செய்திகள்
வசுந்தரா - வசுந்தரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-May-2015 9:56 am

ஓர் நள்ளிரவில்
என் ஆதிக் கனவின்
கீழ
உன்னை எனக்கு
கைப் பிடித்துக் கொடுத்த
முன்னந்திக் காற்று
என் கருவறைச் சித்திரத்தில்
படிந்திருந்த
காதலின் பறவையை
பறக்க விட்டு
வேடிக்கை பார்க்கிறது _
நீ வேடனா ?
சித்தார்த்தனா ?

மேலும்

அருமையான கவிதை... முடிவில் கேட்கப் பட்ட கேள்வியில் நச்சென்று இருக்கிறது கவிதை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 31-May-2015 7:32 pm
புதிய முன்னந்திக்காற்று,,,,,,தென்றல் 31-May-2015 11:10 am
வசுந்தரா - படைப்பு (public) அளித்துள்ளார்
31-May-2015 9:56 am

ஓர் நள்ளிரவில்
என் ஆதிக் கனவின்
கீழ
உன்னை எனக்கு
கைப் பிடித்துக் கொடுத்த
முன்னந்திக் காற்று
என் கருவறைச் சித்திரத்தில்
படிந்திருந்த
காதலின் பறவையை
பறக்க விட்டு
வேடிக்கை பார்க்கிறது _
நீ வேடனா ?
சித்தார்த்தனா ?

மேலும்

அருமையான கவிதை... முடிவில் கேட்கப் பட்ட கேள்வியில் நச்சென்று இருக்கிறது கவிதை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 31-May-2015 7:32 pm
புதிய முன்னந்திக்காற்று,,,,,,தென்றல் 31-May-2015 11:10 am
வசுந்தரா - lambaadi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-May-2015 7:30 pm

சீறிச் சினமெடுத்த
உன் வெட்கத்தின்
வேழமுகம்
நாற்புறமும் பிளிரிச்சீறி
துதிக்கையால்
உறிந்தெடுத்த
காதலை என்மேல்
உமிழ்ந்தலற....
இதோ
முற்றிலும் நனைந்தது
உனது மதமடக்க
வந்தயிந்த
மானிட அங்குசம் ....

இதுவரை
நீ பயன்படுத்திடாத
அகராதியின் சொற்பாராசூட்
விரிந்துவிட்டது ...
கண்காண முடியா
மனதூரம் பறந்து
புரிந்துகொள்ள முடியா
அர்த்தத்தினை
உனது அர்ப்பணத்தின்
மேலிருந்து
கன்னிகழியா அச்சொல்லின்
மொட்டு தொட்டு
காதலின் தயையால்
பிறந்த கருப்பாத்திரங்களின்
ஆகுதிபெற்று
ஆசீர்வதிக்கிறது ...

சொல் உற்று பூவானாய்
மலர்ந்து
மணந்து விரிந்துகொண்டிருக்கிற
நடமாடும் பூச்செண்டே

மேலும்

அதியற்புதம் வார்த்தைகளின் வண்ண ஜாலம் உணர்வுகளின் தமிழின் கோலம் 14-Dec-2015 12:09 am
நன்றி தோழமையே 31-May-2015 11:15 am
மிக்க நன்றி நண்பரே 31-May-2015 11:15 am
மிக்க நன்றி சந்தோஷ் 31-May-2015 11:14 am
வசுந்தரா - கவிஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-May-2015 11:01 pm

சுடும் நிலவில்
விரிகிறது
உன் முகம்....
சுடாத தாகம்
நதி ஒன்றைத் தெளிக்கிறதான
இடைவெளி உருட்டும்
கூழாங்கற்களின்
இளஞ்சூட்டில்
ஒருதுளி பனிக்கட்டி
நிலவைப் படைக்கிறது,
வானம் உடைந்த
முப்பொழுதுக் கற்பனைகளில்....


கவிஜி

மேலும்

ம்ம்ம்..... 10-Jun-2015 11:30 pm
இதம்...... 10-Jun-2015 4:07 pm
நன்றி தோழரே... 01-Jun-2015 2:44 pm
ஒரு துளி பனிக்கட்டி --செம 31-May-2015 9:41 am
வசுந்தரா - அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-May-2015 9:06 am

கம்பத்தில்
ஒலிப்பெருக்கும்
குழாய்களை அமைத்துவிட்டு
சொன்னார் ஒருவர்
கத்தி கத்தியே உயரத்தில்
சென்றுவிட்டது நம்மூரு
அரசியல் வாதிகளை போல...

முடிதிருத்தும்
நண்பர் நக்கல் செய்தார்
பொன்னாடை
போர்த்திவிட்டால்
கொஞ்ச நேரமாவது எங்கும்
தலை சாயக்கூடாது.

இப்போ தான்
செவுரு அழகாயிருக்கு.
கிறுக்கிய குழந்தையை
முத்தமிட்டுவிட்டு வீட்டிற்கு
வெள்ளையடித்து முடித்தவர்
சென்றார்.

சோற துப்பக் கூடாதும்மா
என்ற அம்மாவிடம்
நிலா மாமா மட்டும் துப்பியிருக்கு
என்று நட்சத்திரங்களை காட்டுகிறது
அந்தக் குழந்தை.

எங்கிட்ட பேரம் பேசுனிங்கல்ல
அந்தக் கோபம் என்று சிரிக்கிறார்
நேற்று வாங்கிச் சென்ற

மேலும்

கொட்டவில்லை முட்டிய வலி.. நன்றி ப்ரணவ்.. 04-Jun-2015 10:02 am
நீங்கள் சொன்னதே... அன்று... மறக்காது.. மிக்க நன்றி தோழரே.. 03-Jun-2015 9:33 pm
முட்ட முட்ட.... நல்ல கவிதை வருகிறது. 03-Jun-2015 6:23 pm
//சிலர் தான் (நம்மை போன்றவர்கள்) நானும் எழுதுகிறேன் என்று சொல்லிக் கொள்கிறோம்... அவ்வளவே... // அருமை தோழரே... 03-Jun-2015 6:23 pm
வசுந்தரா - காதலாரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-May-2015 9:10 am

எனை மீறிய தருணத்தில் ...
~~~~~~~~~~~~~~~~~~~~

எனதறைக்கு எதிர் திசையில்
ஐந்தடியில் அசைந்து வீழும்
மஞ்சள்நிற மாய கற்றைக்கு
முற்றிலும் ..உன் முக சாயல் ...

சித்திரைப் பதினைந்தில்...நீ
செம்மண்ணில் நகம் தைக்க
வயல் முழுதும் வர்ணமாகி
நாற்றெல்லாம் நடனம் கற்றது..

மடை உடைத்து நீ நடக்க ..உன்
உடை நனைந்த நீரெல்லாம்
சிற்பத்தின் சிநேகிதியாய்
சொர்க்கத்தில் படிமமானது ..

பாலத்தின் பக்கவாட்டில்
பதித்து வைத்த கவிதைக்குள்
மேகம் மோதிய மீயொலியாய்
சோகம் மீறியது என் காதல் ..

என்றோ.. எரிந்து முடிந்த
என்னுருவத்தின் உச்சியிலிருந்து
சரிந்து வீழும் சாம்பலும்
உன் பெயரை எழுத

மேலும்

வரவில் மகிழ்ச்சி அண்ணே 31-May-2015 8:36 pm
வரவில் மகிழ்ச்சி நண்பரே 31-May-2015 8:36 pm
நிச்சயம், இல்லை ...வரவில் மகிழ்ச்சி ஐயா 31-May-2015 8:36 pm
மகிழ்ச்சி ஐயா வரவில் 31-May-2015 8:35 pm
வசுந்தரா - வசுந்தரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-May-2015 5:35 pm

சொற்கலப்பை கொண்டு
எனதனுமதியின்றி
உழுதுவிட்டுச் செல்கிறாய்
நஞ்சை நிலமென
என் நெஞ்ச நிலத்தை -
முதல் மழையை
எதிர்பார்த்துக் காத்திருக்குமொரு
ஏழை உழவனைப்போல்
நீ என்னில் பொழியும்
திருநாளை எதிர்பார்த்து
கொளுத்தும் கோடையிலும்
வான் பார்த்துக் காத்திருக்கிறேன்
சிறு தூரலையாவது
என் மீது தூரி விட்டுச்
செல்வாயா ?
என் ஏழை நிலம்
பாளம் பாளமாய் வெடிக்குமுன்னரே
ஏனெனில் உன்னால்
ஒரு நன்செய் நிலம்
பாலையாவதிலிருந்து தடுக்கப்படும் .

மேலும்

இந்த உழவு கொஞ்சம் வித்தியாசம். அருமை. வாழ்க வளமுடன் 08-Jun-2015 5:44 am
நன்றி Nanbare 31-May-2015 9:37 am
நன்றி நட்பே 31-May-2015 9:37 am
நன்றி நண்பரே 31-May-2015 9:36 am
வசுந்தரா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-May-2015 5:35 pm

சொற்கலப்பை கொண்டு
எனதனுமதியின்றி
உழுதுவிட்டுச் செல்கிறாய்
நஞ்சை நிலமென
என் நெஞ்ச நிலத்தை -
முதல் மழையை
எதிர்பார்த்துக் காத்திருக்குமொரு
ஏழை உழவனைப்போல்
நீ என்னில் பொழியும்
திருநாளை எதிர்பார்த்து
கொளுத்தும் கோடையிலும்
வான் பார்த்துக் காத்திருக்கிறேன்
சிறு தூரலையாவது
என் மீது தூரி விட்டுச்
செல்வாயா ?
என் ஏழை நிலம்
பாளம் பாளமாய் வெடிக்குமுன்னரே
ஏனெனில் உன்னால்
ஒரு நன்செய் நிலம்
பாலையாவதிலிருந்து தடுக்கப்படும் .

மேலும்

இந்த உழவு கொஞ்சம் வித்தியாசம். அருமை. வாழ்க வளமுடன் 08-Jun-2015 5:44 am
நன்றி Nanbare 31-May-2015 9:37 am
நன்றி நட்பே 31-May-2015 9:37 am
நன்றி நண்பரே 31-May-2015 9:36 am
வசுந்தரா - lambaadi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-May-2015 7:47 pm

பாலையின்
மணல் முழுவதிலும்
பதியம் போட்டிருந்த
வெயிலின் கொடிகள்
வேர்விட்டு
சூரியப் பூக்களை
மொட்டுவிட்டிருந்த
முன்வெயிலில்-
பயணியர் விடுதிகளேதுமற்று
காய்ச்சிப்பழுத்த
சுடுமணல் மேடுகளில்
நிழல்களின் நெகிழ்வுகளையும்
வெயிலின் காயங்களையும்
அசைபோடும் ஒட்டகத்தின்
அடிவயிற்று நிழலில்
ஆசுவாசப் படுத்திக்கொண்ட
உனக்கானயெனது
கவிதையின் வரிகளில்
ஒளித் துளியாய்
முளை விட்டிருக்கும்
வியர்வைத் துளிகளைக்
கேட்டுப்பார் !

மணல் மழை சொரியும்
கொடும்பெரும்
சூறைக் காற்றிலும்
ஈச்சமர ஊசியிலையடுக்குகளில்
கன்றிச் சிவந்திருக்கும்
பொன்சிவப்புப்
பேரீச்சம் பூக்களைப்
போல் -
உயிர் வ

மேலும்

மிக்க நன்றி நண்பரே 30-May-2015 11:35 am
வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே 30-May-2015 11:34 am
நன்றி தோழமையே 30-May-2015 11:32 am
நன்றி உதயா ' 30-May-2015 11:31 am
வசுந்தரா - செ மணிகண்டன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-May-2015 5:44 pm

ஜன்னல் தாண்டி
என்னைத் தீண்டி
சுட்டெழுப்பும் அதிகாலைக்
கதிரவனும் சற்று
கண் பிதுங்கிக் கலங்கி நிற்கும்...

நடைபாதை முட்கள் கூட
என் பாத அதிர்வு கண்டு
பூமிக்குள் புதைந்து கொள்ளும்...

விழும் மழை கூட
என் தலை நனைக்காமல்
விழும்...

பல் நடுங்க வைக்கும்
பனி கூட பாட்டிசைத்து
என்னை உறங்க வைக்கும்...

இவையெல்லாம் நான்
மண்ணோடு போகும் வரை
மனதோடு மலர்ந்திருக்கும்
"என்னோடு நீ இருந்தால்"...


செ.மணி

மேலும்

மிக்க நன்றி தோழரே.. 25-May-2015 1:20 pm
அழகான வார்த்தைகள் .... அருமையான படைப்பு... 24-May-2015 12:46 pm
மிக்க நன்றி தங்கச்சி... 19-May-2015 7:14 pm
அழகிய படைப்பு அண்ணா .... 19-May-2015 10:46 am
வசுந்தரா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2015 7:16 pm

இதோ
நான் கர்வம் கொள்கிறேன்
பாலைவப் பரப்புகளாய்
பரிணமித்துவிட்ட
என் ராஜ்யத்திலும்
ஒரு ஜீவ நதி ஊற்றெடுப்பதால்,
வெட்டவெளிப் பொட்டலான
என் நெற்றிப்பரப்பில்
நீ மட்டும்
எனக்காக சிவப்புப் பந்தெரிய
நினைப்பதால் ,
ஆனாலும்
பிரிதிவிராஜனே
சம்பிரதாயக் கடிவாளம்
மாட்டியிருப்பதால்
உன் காதல் குதிரையும்
சற்று
தயங்கத்தான் செய்கிறது .

மேலும்

மிகுந்த நன்றி நண்பரே 26-May-2015 2:30 pm
மிகுந்த நன்றி 26-May-2015 2:30 pm
நன்றி நண்பரே 26-May-2015 2:29 pm
சுடும் உண்மைகள் தானே நண்பரே ! வலி மிகுந்த வரிகளாகிறது 26-May-2015 2:29 pm
வசுந்தரா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2015 7:55 pm

முல்லைக்குத் தேரல்ல
எனது தேகத்தையே
உனது படரலின்
வழியறிந்து
பரப்பி நிற்கிறேன்
உன் மொக்குகளின்
வாச வார்த்தைகள்
சில நேரங்களில்
செந்தட்டியென
என் மேனியில்
அமிலக்கரம் நீட்டி
எரித்தலை பரிசளித்தாலும்
மூசு வண்டறை
பொய்கையென உணரும்
என் இதயத்தில்
குளிர்ச்சி வீசுமுனது
காதல் வாழ்க .

மேலும்

நன்றி தோழி 26-May-2015 2:36 pm
மிக அருமை 21-May-2015 8:03 am
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே 01-May-2015 7:23 pm
நன்றி நண்பரே . கொஞ்சம் படித்திருக்கிறேன் 01-May-2015 7:22 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

மயில் அமுது

மயில் அமுது

கடத்தூர், உடுமலை வட்டம்
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
அமுதினி

அமுதினி

சிதம்பரம்-தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (14)

இவரை பின்தொடர்பவர்கள் (14)

user photo

அமுதினி

அமுதினி

சிதம்பரம்-தமிழகம்
மேலே