முதல்மழை

சொற்கலப்பை கொண்டு
எனதனுமதியின்றி
உழுதுவிட்டுச் செல்கிறாய்
நஞ்சை நிலமென
என் நெஞ்ச நிலத்தை -
முதல் மழையை
எதிர்பார்த்துக் காத்திருக்குமொரு
ஏழை உழவனைப்போல்
நீ என்னில் பொழியும்
திருநாளை எதிர்பார்த்து
கொளுத்தும் கோடையிலும்
வான் பார்த்துக் காத்திருக்கிறேன்
சிறு தூரலையாவது
என் மீது தூரி விட்டுச்
செல்வாயா ?
என் ஏழை நிலம்
பாளம் பாளமாய் வெடிக்குமுன்னரே
ஏனெனில் உன்னால்
ஒரு நன்செய் நிலம்
பாலையாவதிலிருந்து தடுக்கப்படும் .

எழுதியவர் : வசு (27-May-15, 5:35 pm)
Tanglish : muthalmalai
பார்வை : 143

மேலே