படரலின் தேர்

முல்லைக்குத் தேரல்ல
எனது தேகத்தையே
உனது படரலின்
வழியறிந்து
பரப்பி நிற்கிறேன்
உன் மொக்குகளின்
வாச வார்த்தைகள்
சில நேரங்களில்
செந்தட்டியென
என் மேனியில்
அமிலக்கரம் நீட்டி
எரித்தலை பரிசளித்தாலும்
மூசு வண்டறை
பொய்கையென உணரும்
என் இதயத்தில்
குளிர்ச்சி வீசுமுனது
காதல் வாழ்க .