வீசு தென்றல்

எச்சரிக்கிறேன் கோபத்தில் கொந்தளிக்கிறேன்
இச்செயலை மறந்தும் மறுபடி செய்தால்
சித்ரவதை செய்வேன் என்று உச்சரிக்கிறேன்
எல்லோரும் மிக போற்றுவர் தாலாட்டுவார்
உன் ஸ்பரிசத்திற்கு ஏங்கி ஏங்கி பலநேரம்
நீ தவழ்ந்ததும் ஆசுவாசத்தில் பாராட்டுவார்
அலைபாயும் தீபம் நீ எட்டிபார்ப்பதை காட்டுது
என் தலைவியுடன் தனித்திருக்கும் நேரத்தில்
தனியறையில் உனக்கென வேலை கேட்குது
அவர்போல் என்னை லேசாக எண்ணாதே
எச்சரிக்கிறேன் கோபத்தில் கொந்தளிக்கிறேன்
சித்ரவதை செய்வேன் என்று உச்சரிக்கிறேன்