கனவு
ஓர் நள்ளிரவில்
என் ஆதிக் கனவின்
கீழ
உன்னை எனக்கு
கைப் பிடித்துக் கொடுத்த
முன்னந்திக் காற்று
என் கருவறைச் சித்திரத்தில்
படிந்திருந்த
காதலின் பறவையை
பறக்க விட்டு
வேடிக்கை பார்க்கிறது _
நீ வேடனா ?
சித்தார்த்தனா ?

