எனை மீறிய தருணத்தில் - தேன்மொழியன்

எனை மீறிய தருணத்தில் ...
~~~~~~~~~~~~~~~~~~~~

எனதறைக்கு எதிர் திசையில்
ஐந்தடியில் அசைந்து வீழும்
மஞ்சள்நிற மாய கற்றைக்கு
முற்றிலும் ..உன் முக சாயல் ...

சித்திரைப் பதினைந்தில்...நீ
செம்மண்ணில் நகம் தைக்க
வயல் முழுதும் வர்ணமாகி
நாற்றெல்லாம் நடனம் கற்றது..

மடை உடைத்து நீ நடக்க ..உன்
உடை நனைந்த நீரெல்லாம்
சிற்பத்தின் சிநேகிதியாய்
சொர்க்கத்தில் படிமமானது ..

பாலத்தின் பக்கவாட்டில்
பதித்து வைத்த கவிதைக்குள்
மேகம் மோதிய மீயொலியாய்
சோகம் மீறியது என் காதல் ..

என்றோ.. எரிந்து முடிந்த
என்னுருவத்தின் உச்சியிலிருந்து
சரிந்து வீழும் சாம்பலும்
உன் பெயரை எழுதுவதேனோ .?

- தேன்மொழியன்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (31-May-15, 9:10 am)
பார்வை : 125

மேலே