கர்வம்

இதோ
நான் கர்வம் கொள்கிறேன்
பாலைவப் பரப்புகளாய்
பரிணமித்துவிட்ட
என் ராஜ்யத்திலும்
ஒரு ஜீவ நதி ஊற்றெடுப்பதால்,
வெட்டவெளிப் பொட்டலான
என் நெற்றிப்பரப்பில்
நீ மட்டும்
எனக்காக சிவப்புப் பந்தெரிய
நினைப்பதால் ,
ஆனாலும்
பிரிதிவிராஜனே
சம்பிரதாயக் கடிவாளம்
மாட்டியிருப்பதால்
உன் காதல் குதிரையும்
சற்று
தயங்கத்தான் செய்கிறது .