அங்குசம்

சீறிச் சினமெடுத்த
உன் வெட்கத்தின்
வேழமுகம்
நாற்புறமும் பிளிரிச்சீறி
துதிக்கையால்
உறிந்தெடுத்த
காதலை என்மேல்
உமிழ்ந்தலற....
இதோ
முற்றிலும் நனைந்தது
உனது மதமடக்க
வந்தயிந்த
மானிட அங்குசம் ....
இதுவரை
நீ பயன்படுத்திடாத
அகராதியின் சொற்பாராசூட்
விரிந்துவிட்டது ...
கண்காண முடியா
மனதூரம் பறந்து
புரிந்துகொள்ள முடியா
அர்த்தத்தினை
உனது அர்ப்பணத்தின்
மேலிருந்து
கன்னிகழியா அச்சொல்லின்
மொட்டு தொட்டு
காதலின் தயையால்
பிறந்த கருப்பாத்திரங்களின்
ஆகுதிபெற்று
ஆசீர்வதிக்கிறது ...
சொல் உற்று பூவானாய்
மலர்ந்து
மணந்து விரிந்துகொண்டிருக்கிற
நடமாடும் பூச்செண்டே
ஒழுங்கேற்று நில் ...
காற்றில் ஓடப்போதாது
உன் மணம்...
நெடிநுகருனது
நறுமணம்
என் நாசிமட்டும்
தீண்டி
உன் மணம்
பூரணம் பெருக
மலராட்சி நடக்குமுனது
தோட்டத்திலிருந்து
இதழ்களை முடுக்கி
உன்னைப் பெருக்குவேன் .