ஏன் இப்படி

அரிசி விளையவில்லை
அரசியல் விளைந்திருக்கிறது

------------------------------------------------

அழுகை முடியவில்லை
காரணம்
அழவைப்பது முடியவில்லை

-------------------------------------------------

வர வேண்டியது வரவில்லை
வறுமை வந்தது

------------------------------------------------

வலியவன் சேர்க்கிறான்
வலிமை இல்லாதவன்
செலவாகிறான்

-------------------------------------------------

வாங்க முடியா
உடைமை
பொதுவுடைமை

--------------------------------------------------

அரசுக் கட்டிலில்
அயர்ந்து தூங்குகிறது
அரசின் மனசாட்சி

----------------------------------------------------

அரசியல் லாட(ப)த்திற்கு
அடங்காத
குதிரை இல்லை

-------------------------------------------------

தப்பு தின்றவன்
தண்டனை குடிப்பதில்லை

----------------------------------------------------

சாதி இருப்பதால்
சாவு கிடைக்கிறது

----------------------------------------------------

பெண் பார்த்த கையோடு
இடம் பார்த்தார்கள்
முதியோர் இல்லத்திற்கு

------------------------------------------------------

கல்யாணம் நடப்பதால்
முதியோர் இல்லம் நடக்கிறது

--------------------------------------------------------

ஊருக்கு வரம் தர
கடவுளானேன்
கடவுளுக்கு வரம் தர
மதமானேன்

----------------------------------------------------------

எழுதியவர் : Raymond (30-May-15, 6:59 pm)
Tanglish : aen ippati
பார்வை : 114

மேலே