ranibala - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ranibala |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 21-May-1983 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Mar-2012 |
பார்த்தவர்கள் | : 970 |
புள்ளி | : 88 |
alaikadalin siru muthu
சுருண்டடையும் நத்தைகள்
என்றுமே வெளியேற விரும்புவதில்லை!
வேகும் புழுக்கத்திலும்,
கூட்டையும் சுமந்தே திரியும்!
வெளியேறும் பயமா?-இல்லை
வெளியுலகு பயமா?
அதை நாமாய் வகுத்தோம்
மெல்லுடலிகளென்று!
சிலநேரம் மென்கொல்லியாகக் கூட
இருக்கலாம்!-இல்லை
சுற்றத்தையும்
அரைத்து விழுங்கும்
விஸ்வரூபியாகக் கூட இருக்கலாம்!
ஏதோ ஒன்று-ஆனாலும்
சுமந்தே திரிகிறது
இறக்கிவைக்க வழியற்று!!!
இழப்புகளை
மனம் ஏற்றது
தானமாக !!!!
முழுங்கி விடு
செமிக்க முடியாதவற்றையும் ,
துப்ப மட்டும் செய்யாதே !
அதையும் ஆராயும் இந்த
கேடு கெட்ட உலகம்........
என் தேர்ச்சி சொல்லும்
அஞ்சலட்டையிலும்
அப்பா அம்மா
வாக்காளரட்டையிலும்
அரிசி மண்ணெண்ணெய்
வாங்கும் குடும்ப அட்டையிலும்
எங்களுக்கோர் அடையாளமாய்
எங்கள் வீட்டு முகவரி
வீட்டிலிருந்து
ஐந்து நிமிடம் நடந்தால்
வந்துவிடும் பள்ளி
எனக்கும் தங்கைக்கும்
பத்து நிமிட
மிதிவண்டி பிரயாணம்
அப்பாவின் தொழிற்சாலை
வேலியோரத்தில்
வைத்த தக்காளிச்செடி
பூக்களாய் பூத்திருந்தது
உச்சி நிலவும்
தென்னை மரம் மட்டும்
எஞ்சியிருந்தது
சுவரில் வரைந்த
தங்கையின் ஓவியத்தில்
வெள்ளைக் காகிதமும்
அகழ்பொறி சகிதமும்
வந்திருந்தனர்
கடமை தவறா
அரசு அதிகாரிகள்
தள்ளி விட்டால்
விழுந்துவிடும்
எங்கள் வீட்டு சுவரை
...............................................................................................................................................................................................
அதிகாலை சூரிய நமஸ்காரம் செய்து விட்டு துவைத்த வேட்டி துண்டை கொடியில் காயப் போட்டேன். ஒரு வாய் சுக்கு காபிக்கு மனம் ஏங்கியது. வெடவெடக்கிற காலைக் காற்றுக்கு அந்த மணமே சுகமாக இருக்கும். காமாட்சி இருந்தால் நான் சொல்லாமலே புரிந்து கொண்டு இந்நேரம் காபியோடு நின்றிருப்பாள்.
மகனும் மருமகளும் இன்னும் எழுந்திரிக்கவில்லை. தாழ்வாரத்தில் இருந்த என் கட்டிலில் அமர்ந்து கொண்டேன். இன்னும் கிட்டதட்ட ஒரு மணி நேரம் இப்
நாசியைத் திறந்து அமர்ந்து கொண்டேன் கொசுக்காய் வலையடித்த ஜன்னலின் அருகில்.எதையோ மோப்பம் பிடிப்பதாய் என் உத்தேசம்.ஒரு மணி நேரம் கடந்து நான் எதிர் பார்த்த "மணம்" வரவில்லை.பக்கத்து வீட்டிலிருந்து "மில்க் மேட்"பாயாசம் மணம் ,பப்புவுக்கு பிறந்த நாளென்று.மாடி வீட்டு மாமி செய்யும் "ஆச்சி"மசாலா சாம்பார்.எதிர் வீட்டு ஸ்டெல்லா அக்கா செய்யும் "ரெடிமேட்" சூப் மணம்.இது எதற்காகவும் இல்லை நான் காத்திருப்பது.பொறுத்து பொறுத்து பார்த்து விட்டேன் இனி நாமே தேடி போய்ட வேண்டியதுதான் .தெருவில் இறங்கி அத்தனை"ரெடி மிக்ஸ்" களின் வாசனைகளையும் கடந்து கொண்டிருந்தேன்.இதோ கிட்ட வந்துட்டேன்.
மாட்டுக்கார முனியப்பன் பால
கழன்றுவீழும் நியூரான்கள்
வாழ்வைத் தொடர்பவைகளிடம்
தவறாமல்
திணித்துவிட்டுச் சென்றுவிடுகிறது உன்
ஞாபகங்களை....
நிலவொளியும் விளக்கொளியும்
கலந்த நாளொன்றில் ஒரு
யட்சியைப் போல நீ வந்திருக்க...
பேசுவதற்கு ஏதுமில்லாமல்
சலிக்கச் சலிக்க காமம் துய்த்துப்பின்.....
பாதிராக்கோழியின் சத்தத்திற்கு
முன்னதாக
முத்தங்களோடு காதல் பகிர்ந்தது...
காதலுக்குப் பிந்தைய
காமம்.... காமத்தோடவே முடிந்து போகிறது...
காமத்திற்குப் பிந்தைய
காதல்... காதலாகத் துளிர்விடுகிறது..
அவ்வாறாகத்தானே... ஒவ்வொருநாளும்
எனக்குள்
சமைக்க...குளிக்க...
விளம்ப...உடுத்த... அவிழ்க்க.. என
நிகழ்வுகளில் எல்லாம
வரதராஜனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தான் கனவில்கூட நினைத்துப் பார்த்திராத அந்தச் செய்தியை பாலகிருஷ்ணன் சொன்னபோது,பக்கத்தில் குண்டு விழுந்தாற்போல சர்வாங்கமும் நடுங்கியது. ‘இந்தச் செய்தி பொய்யாய் இருக்கக்கூடாதா..?’
பத்துநிமிடத்திற்கு முன்,எப்போதும் போல ஆபீஸ் முடிந்து வந்து கொண்டிருந்தார் வரது.வீட்டுக்குள் நுழையும் சமயம் “டேய் வரது..” பாலகிருஷ்ணன் அழைத்தார். இருவரும் அடுத்தடுத்த வீட்டுக்காரர்கள்.நடுவே நாலடி உயர காம்பவுண்ட் சுவர் வீடுகளைப் பிரித்ததே தவிர,இருபது வருட நட்பு பிரியாமலே இருந்தது.“ஒரு அஞ்சு நிமிஷம் உள்ளே வந்துட்டுபோ..”
“ என்னப்பா அவ்வளவு அவசரம்..? “என்று கேட்டபடியே திரும்பி வந்தா
பனிக்காலம்
மரத்துப் போக வைத்த
நிலவினை
உன் காதலால்
சுட்டுச் சிவப்பித்து
இளவேனிலுக்குப்
பக்குவப்படுத்துகிற
அக்னிப்பரீட்சையில்
ஒரு கூடை வெள்ளை ரோஜாவை
தமயந்தியின்
வெள்ளன்னமென
தூதனுப்பினேன்
வந்ததா சகி ?
நிலவையும்
சப்த ரிஷிமண்டலத்தையும்
உன்னோடு கோத்துச்
சேர்த்து
துருவ நட்சத்திரத்து வேலிமுள்ளில்
செங்காந்தலை விரியவைத்து
புறாவின் சிறகுகளில்
நீ குடைவிரிக்கையில்
கடைசி விண்வெளி பயணியென
வேறொரு நட்சத்திரத்தில்
ஒளி விரித்து வளரும்
உயிரின் முனைகொண்டு
காத்திருக்கிறேன் !
பட்டாசுகளுக்கும்
பூவானங்களுக்கும்
இடையில் அமர்ந்து
நீ காதல் மத்தாப்புக்
கொளுத்துகிறா
மழையும்,வெயிலும்
புணரும் வேளையில்,
சொட்டும் மழையுடன்
உன் ரசனையின் ரசிப்புகள்!
விடுதலையான கூண்டுக்கிளியைப் போல,
விடுதலையான
எனக்கான உன் கவிதைகள்!
தேநீர் அருந்தையில்
உதட்டின் மேலிருக்கும் ஒரு சொட்டு
உன்னை நினைக்க வைக்கும்
பனியை உறிஞ்சும் சூரியனாய்!
மலர் வண்டின்
மகரந்தக் குளியல்
எனைத் தீண்டும்-உன்
நினைப்பாய்!
மென் காற்றிலுதிர்ந்து
தலை நிறைக்கும்
வேப்பம்பூவாய்-என்
மனம் நிறைக்கும்
உன் கவிதைகள்!
காதல் அலைகள்
சுனாமியாய் தாக்கிக்
கொண்டு தான் இருக்கிறது!
அஞ்சிக்கொண்டே
மூழ்க நினைக்கிறோமே
ஓரமாய் நின்று கொண்டு!
உழைப்பவர் வியர்வை
உலர்வதற்குள்
அவருக்குரிய ஊதியத்தை
கொடுத்து விடுங்கள்!
---------நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
நண்பர்கள் (73)

கட்டாரி
பட்டுக்கோட்டை.

ஆஷைலா ஹெலின்
திருவனந்தபுரம் , கேரளா

வசுந்தரா
கும்பகோணம்
