நத்தைக் கூடுகள்
சுருண்டடையும் நத்தைகள்
என்றுமே வெளியேற விரும்புவதில்லை!
வேகும் புழுக்கத்திலும்,
கூட்டையும் சுமந்தே திரியும்!
வெளியேறும் பயமா?-இல்லை
வெளியுலகு பயமா?
அதை நாமாய் வகுத்தோம்
மெல்லுடலிகளென்று!
சிலநேரம் மென்கொல்லியாகக் கூட
இருக்கலாம்!-இல்லை
சுற்றத்தையும்
அரைத்து விழுங்கும்
விஸ்வரூபியாகக் கூட இருக்கலாம்!
ஏதோ ஒன்று-ஆனாலும்
சுமந்தே திரிகிறது
இறக்கிவைக்க வழியற்று!!!