ஆஷைலா ஹெலின் - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : ஆஷைலா ஹெலின் |
இடம் | : திருவனந்தபுரம் , கேரளா |
பிறந்த தேதி | : 30-Jun-1968 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 922 |
புள்ளி | : 67 |
எழுத்தாளர்
கலிவிருத்தம்
உற்ற அன்பரும் ஊனுடல் சொந்தமும்
சுற்றிச் சூழ்ந்திடும் சுந்தர பந்தமும்
பற்றிக் காக்கிற பாதுகாப் பாயினும்
முற்றும் நீங்கிடும் மூச்சுநிற் கையிலே!
தமிழ்ச் சூழலில் வளர்ச்சி பெற்ற இசை தமிழிசை ஆகும். குறிப்பாக தமிழர்களின் செவ்விய இசை முறைமையைக் குறிக்கிறது. தாலாட்டில் இருந்து ஒப்பாரி வரை தமிழர் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் இசை ஒரு முக்கிய கூறு. இயல், இசை, நாடகம் என்று தமிழை முத்தமிழாகப் பாகுபடுத்தி, இசைக்கு முன்னுரிமை தொன்று தொட்டு தரப்பட்டது. பண்டைப் பண் இசை, செவ்வியல் தமிழ் இசை, பக்தி இசை, நாட்டார் இசை, திரையிசை, சொல்லிசை என தமிழிசையின் வடிவங்கள் பல. கால ஓட்டத்தில் தமிழிசை சிறப்புற்று இருந்த காலங்களும் உள்ளன; வேற்று மொழிகளின் மரபுகளின் ஆதிக்கத்தில் தேக்க நிலையில் இருந்த காலங்களும் உள்ளன. 20 ம் நூற்றாண்டில் தமிழிசை மீட்கப்பட்டு, மீளுருவாக
பேறுகாலத்திற்குப் பின் தாய் நலம்
எனக்கு மிகவும் அறிமுகமான ஒரு நபரின் பெயர் சீதா. அவருடைய திருமணம் பத்து வருடங்களுக்கு முன்பாக சிறப்பாக நடைபெற்றது. அவரின் திருமண வாழ்க்கை சுமூகமாக செல்லுகின்ற நிலையில் முதல் பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவரின் சமூகக் கலாச்சாரப்படி முதல் குழந்தையின் பேறுகால பராமரிப்பு என்பது அப்பெண்ணின் தாய்வீடாகும். அவ்வாறே முதற்பேற்றின் கவனிப்பும் பராமரிப்பும் சிறப்பாக அமைந்தது.
அதன் பின்னர், இரண்டு வருடங்கள் கழிந்து மறுபடியும் சீதா கருவுற்றார். இப்பொழுது இரண்டாவது குழந்தையின் மகப்பேற்றையும் பராமரிப்பையும் ஏற்பது யார்; என்று மாப்பிள்ளை பெண் வீட்டாரிடையே தர்க்கம் ஏ
பொங்கல் திருநாள்
தமிழர்கள் கொண்டாடும் பல்வேறு விழாக்களுள் ‘தமிழர் திருநாள்’ என்று பெருமையுடன் கொண்டாடப்படுகின்ற விழா பொங்கல்.
பொங்கல் ஒவ்வோரு ஆண்டிலும் நான்கு நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இந்திரனைக் குறிக்கும் ‘போகி’ என்பது பொங்கலின் முன்னோடியாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்நாளில் பழையனவற்றைக் களைந்து வீடடைச் சுத்தம் செய்து சுவர்களுக்கு வண்ணம் தீட்டி அலங்கரிக்கப்பட்டு இல்லங்கள் எழிலுடன் காட்சியளிக்கும். பொங்கல் நாளின் முந்தைய நாளான இப்போகிப்பண்டிகை அன்றோ, அதற்கு முன்போ அரிசி, கரும்பு, சர்க்கரை வாழைப்பழம், தேங்காய், மஞ்சள் கொத்து புதிய பானை போன்வற்றை திருமணமான பெண்களுக்குத
மெய்ப்பாடுகளை வெளிப்படுத்தும் “கண்ணதாசனின் சிலப்பதிகார கவிதை”
.
மனிதனின் மனதில் உருவாகின்ற நிகழ்வினை உளவியல் அடிப்படையில் சங்க காலத்திலேயே தொல்காப்பியர் அறிந்து வைத்திருக்கிறார். ஆகையால் தான் மனதில் உருவாகின்ற அனைத்தையும் உடல் வழியாக வெளிப்படுத்துகின்ற மெய்ப்பாடுகளாகக் குறிப்பிடுகிறார். தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு வகையான மெய்ப்பாடும் கவிதையின் ஆணிவேராக இருக்கிறது. அவ்வாறாக உருவாகின்ற மெய்ப்பாடுகள் உணர்ச்சிகளாக வெளிப்படுகிறது. மெய்ப்பாடுகள் கவிதைக்கு பெருமளவு முக்கியத்துவம் உரியதாய் அமைகிறது. தொல்காப்பியர் இதனை குறிப்பிடும் போது,
“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அ
இணைகோடுகள்
சிக்னல் பச்சையானதும்
முதலெனில் இராஜ கம்பீர போக்கு.....
முந்தி முந்திட போராட்டம்
தோன்றும் போதே தயவு தாட்சண்யம்....
பாய்ந்து பறக்குது பள்ளம் மேடெல்லாம்
ஆம்புலன்சுக்கு முன்கடன்.......
அதிர்ச்சி முதிர்ச்சியானாலும்
தனக்கென்றொரு சீரோட்டம்......
வாழ்க்கைப் பயணமும்
இதனின் இணைகோடே.....
’இசையாய்’ என்ற அழகிய பெயரில் மிக அழகிய சிறு பெஞ்சில் சாய்ந்து நிற்கும் வயழின் கோட்டு ஓவிய அட்டைப்படம் - அற்புதமான கற்பனை சாதரண பார்வையிலேயே ஈர்க்கிறது..பேராசிரியர் .சந்திரிகா ராஜாராம் தான் ரசித்து உணர்ந்த இசைச் சாகரங்களுக்கு இசையஞ்சலிச் செலுத்துவிதமாக படைத்த இக் கட்டுரைகள் இவை. இசையறிவுப் படைத்தவர்களுக்காக மட்டுமல்ல இந்த பதிவுகள் .எங்காவது நீங்கள் காதில் கேட்கும் சிறு இசைக் கசிவினால், உங்கள் மனம் கரைந்து போயிருந்தால் இந்த வாசிப்பின் மூலம் அதை நமக்கு தந்த ரிசி மூலங்களான இசைச் சாகர மேதைகளுக்கு நன்றி சொல்லும் வாய்ப்பாக நிச்சயமாக ஒவொருவரும் வாசிக்க வேண்டிய சுகானுபவம் இந்தக் கட்டுரைக் கதம்ப
மௌனமொழி
மனதில் யோசிப்பது
தெரிந்த மொழியிலே…
புலம் பெயர்ந்தால்
பேசும் மொழியில் திணறல்….
அறியாது தன் மொழியானால்
தாழ்வாக தள்ளப்படுதலே….
தங்கத்தில் பதித்த வைரமாயிட
சிலகாலம் மௌனமொழியே……
அன்றைய நாட்களில்
கட்டிக்கப் போறவளாய்
அறிமுகப்படுத்தப்பட அவளுக்கும்
இவளையா... எனச்
சுழித்து நகர்ந்த எனக்கும்
கட்டிக்கப் போறதின் அர்த்தமென்பது
தெரிந்திருக்கவில்லை.....!
திருக்கொடை மதியப்பந்திகளில்
தண்ணீர் வைத்துப் போக..
கைவளையல்கள் ரசித்திருந்ததைப்
போலவே...
நிலைக்கட்டுப் பின்ஒளிந்து
என் பக்கவாட்டையும்
அவள் ரசித்திருந்திருக்கலாம்....!!
ஈரம் சொட்டிய
பூப்பாவாடைகளோடு
குளக்கரை ஒற்றையடிப் பாதைகளில்
எதிர்க்கடந்து போன
நாளொன்றிற்குப் பிறகு...
இவ்வருடக் கொடையின்போதும்
சுகம் விசாரித்து... அக்காவைக்
கேட்டதாகச் சொல்லியபடி
குரலுடைந்த அவளின்....
வெட்கத்திற்கு.......
காதோரம் கொஞ்ச
காகங்கள் கூட்டமாய் .
தனிமை வெறுப்பவை அவை
உண்ணும் போதும்
உட்காரும்போதும்
கொத்திவரும் அவற்றின் அலகுகளில்
வடைகள் மட்டுமல்ல
சிலரின் வாழ்க்கையுந்தான்
உள்ளிறக்கும் உணவு துகள்களில்
உழைப்பும் உண்மையும் இல்லையெனில்
உமிழும் அவை எச்சங்கள் என .
மந்திரிமார்கள் மாளிகைகள்
அரசு அலுவலகங்கள்
காவல்துறைமார்கள் கட்டிடங்கள் ....
பல ஆசிரமங்கள்
"ஏவிளா ..., அழுத்தத்தி தொடச்சுப் போடுலே
எச்சம் மணக்குதல்லா .. "
புதுப்புது திரவியங்களாலும் எச்சம் அப்படியே ..
"ஏலே ....நம்ம கடைமடையிலும்
ரோதைகளிலும்
ஏம்லா எச்சமே இல்லே "
ஆனாலும் இப்போதெல்லாம்
கண்ணாடிகளை அலகுகளினால்
கொத்த