கண்ணாடிக் கொத்தும் காகங்கள்

காகங்கள் கூட்டமாய் .

தனிமை வெறுப்பவை அவை
உண்ணும் போதும்
உட்காரும்போதும்

கொத்திவரும் அவற்றின் அலகுகளில்
வடைகள் மட்டுமல்ல
சிலரின் வாழ்க்கையுந்தான்

உள்ளிறக்கும் உணவு துகள்களில்
உழைப்பும் உண்மையும் இல்லையெனில்
உமிழும் அவை எச்சங்கள் என .

மந்திரிமார்கள் மாளிகைகள்
அரசு அலுவலகங்கள்
காவல்துறைமார்கள் கட்டிடங்கள் ....

பல ஆசிரமங்கள்

"ஏவிளா ..., அழுத்தத்தி தொடச்சுப் போடுலே
எச்சம் மணக்குதல்லா .. "
புதுப்புது திரவியங்களாலும் எச்சம் அப்படியே ..

"ஏலே ....நம்ம கடைமடையிலும்
ரோதைகளிலும்
ஏம்லா எச்சமே இல்லே "

ஆனாலும் இப்போதெல்லாம்
கண்ணாடிகளை அலகுகளினால்
கொத்துவதை
எல்லோரும் விரட்டுகின்றனர் ....நகரங்களில் ...

அமாவாசைக்கு இப்போதெல்லாம்
மாடி அடுக்கங்களுக்கு
காகங்கள் கூடுவதில்லையாம் ..!!!!

எழுதியவர் : agan (20-Apr-15, 10:17 pm)
பார்வை : 104

மேலே