மரணச்செறிவில் ஓர் பிரிவிலான துயரமாய்
என் அன்புக்குரியவரிடமிருந்து
எனக்கு கொடுக்கப்பட்ட
மரணதண்டனை
நான் என்ன தவறு செய்தேன்
என்று
என்னிடம் சொல்லாமலே
எனை வெறுத்து விலகி
விடுவதுதான்.......
மரணத்தை விட கொடியது
பார்த்து பார்த்து பாசம்
வைத்தவர்
விரும்பி வந்து நேசித்தவர்
ஒரு நாள்
பார்த்தும் பார்க்காதது போல்
செல்வது
மரணத்தை விட ரணம்
ரணமாய் கொள்ளும்.....
உண்மையான நட்பு
ஒருபோதும் யார் என்ன
சொன்னாலும் சந்தேகிக்காது.....
சீரணிக்க முடியாத
என் மீதான உன்
பாச நினைவுகள்
ஒரு நாள் எனை புரிந்து கொள்ளும்
என்ற நம்பிக்கையில்
இது
நானெழுதிய முதல்
எதார்த்த கவிதை உனக்கானது......