அகலா விலகல்
இறகின் மெல்லிய உதிர்தலாய்
இழந்துக் கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளை .....
அன்றியும் என்னில் அவை
பிசிறுகள் என
சிறு வீக்கங்கள் என
தேங்கி விட்டாலோ
குறு விரிப்பென
பரவி விட்டாலோ
என் நினைவுகளற்ற
உன் வாழ்வின் நொடிகள்
எப்படி இருக்கும்
எனும் என் வலிக்கு என்ன சொல்வாய் ??
உனக்குமெனுக்குமான இடைவெளி
ஒரு மழைப்பொழிவின்
அகலமென இருக்கட்டும் .
அப்போதுதான்
எனக்கான உனது விலகலின் அகலம்
இருவருக்கும் இருக்கும் .
நாளை சேர்வோமெனும்
நம்பிக்கையில்
மழையும் இனி சாரலாகட்டும்
அல்லாவிடின் பெய்யாமல் போகட்டும் !!!!.