இணைகோடுகள்

இணைகோடுகள்

சிக்னல் பச்சையானதும்
முதலெனில் இராஜ கம்பீர போக்கு.....

முந்தி முந்திட போராட்டம்
தோன்றும் போதே தயவு தாட்சண்யம்....

பாய்ந்து பறக்குது பள்ளம் மேடெல்லாம்
ஆம்புலன்சுக்கு முன்கடன்.......

அதிர்ச்சி முதிர்ச்சியானாலும்
தனக்கென்றொரு சீரோட்டம்......

வாழ்க்கைப் பயணமும்
இதனின் இணைகோடே.....

எழுதியவர் : ஆ.ஷைலா ஹெலின் (11-Mar-16, 12:08 pm)
சேர்த்தது : ஆஷைலா ஹெலின்
பார்வை : 111

மேலே